சிங்கப்பூரில் நேற்று (டிசம்பர் 18) பிற்பகல் 1.55 மணியளவில், Gateway Drive பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு அழைப்பு வந்தது. உடனடியாக SCDF அங்கு விரைந்தது, Gateway Drive பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 9வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை SCDF கண்டறிந்து அதை விரைந்து அணைக்க முற்பட்டனர். குடியிருப்பில் உள்ள படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : ஆச்சர்யமூட்டும் நீண்ட நெடும் 21 நாள் ரயில் பயணம்
மேலும் SCDF அதிகாரிகள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த வளாகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் தீயணைக்கும் கருவியை கொண்டு அந்த தீயை அணைத்து குறிப்பிடத்தக்கது. மேலும் குடிமை பாதுகாப்பு படையினர் புகையை சுவாசித்த மற்றும் லேசான தீ காயங்கள் இருந்த ஒருவரை உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், மெழுகுவர்த்தியை கவனிக்காமல் விட்டுவிட்டு சென்றதால் அது கீழே விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. ஒளியூட்டப்பட்ட பொருட்களை ஒருபோதும் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள், மேலும் அத்தகைய பொருட்களை குப்பைச் சட்டிகள் அல்லது தொட்டிகளில் அப்புறப்படுத்துவதற்கு முன் அவற்றை முழுவதுமாக அணைக்க வேண்டும் என்றும் SCDF பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது நிச்சயம் எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளை அணைக்க மறக்கக்கூடாது. அப்படி விழிப்புடன் நடந்தால் நிச்சயம் இதுபோன்ற விபரீதங்களை நம்மால் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.