TamilSaaga

“சிங்கப்பூரில் உள்ள பணியாளர்களில் 97% முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்” – பணியிடங்களுக்கு திரும்புதல் குறித்து ஆய்வு

சிங்கப்பூரின் தொழிலாளர் தொகுப்பில் சுமார் 97 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் கடந்த டிசம்பர் 5ம் தேதி நிலவரப்படி இன்னும் சுமார் 75,000 ஊழியர்கள் மட்டுமே இன்னும் தடுப்பூசி போடவில்லை என்று மனிதவள அமைச்சகம் தி சண்டே டைம்ஸிடம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் 1,13,000 தடுப்பூசி போடப்படாத தொழிலாளர்கள் இருந்த நிலையில், தற்போது அது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : தொற்றிலும் தொடர்ந்த சேவை

வரும் வருடத்தில் ஜனவரி 1ம் தேதி பணியிடத்திற்கு திரும்பும் அனைத்து ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவுக்கு பிறகு இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பணியாளர்கள் கடந்த 270 நாட்களில் தொற்றிலிருந்து மீண்டிருந்தால் அல்லது அவர்கள் பணியிடத்தில் இருக்க வேண்டிய காலத்திற்கு முன்-நிகழ்வு சோதனை (PET) முடிவுகள் எதிர்மறையாக இருந்தால், அவர்கள் பணியிடங்களுக்கு திரும்பி வரலாம். PET முடிவு 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என்பதும் நினைவுகூரத்தகத்து.

கடந்த அக்டோபரில் முதன்முதலில் இந்த தடுப்பூசி விதி அறிவிக்கப்பட்டது, இந்த பணியிட தடுப்பூசி நடவடிக்கைகள் நமது சிங்கப்பூர் குடியரசை மீண்டும் பாதுகாப்பாக திறக்க அனுமதிக்கும் மற்றும் பெருந்தொற்று தடைகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களை ஆதரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் மிகப் பெரிய வேலையளிப்பான பொதுச் சேவைப் பிரிவு (PSD), அதன் முகவர்களுடன் பேசுவதற்கும், தடுப்பூசி போடப்படாத அதிகாரிகளைத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மற்றவர்களைப் பாதுகாப்பதற்கும் தடுப்பூசி போடுவதற்கு வலுவாக ஊக்குவிப்பதற்கும் நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறியது.

மேலும் அதில் பணிபுரியும் 1,53,000 பொது அதிகாரிகளில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கிடையில், 99 சதவீத முன்னணி போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts