சிங்கப்பூரில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 29) அன்று யியோ சூ காங்கில் அமைந்துள்ள நூறு பாம்ஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள், கிறிஸ்துமஸ் விழா வருவதையொட்டி தங்களுடைய அன்பு பரிசுகளாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு “Bluetooth Earphone”களை நன்கொடையாக வழங்கியதாக சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் நல்வாழ்வு குழு ItsRainingRaincoats தனது முகநூல் பதிவில் பகிர்ந்து கொண்டது.
இதையும் படியுங்கள் : “மகளை காக்க போராடிய தந்தை”
உலக அளவில் நிலவும் இந்த கடுமையான சூழலில் சொந்த மண்ணையும், வீட்டையும் விட்டு வெகு தொலைவு வந்து வேலை செய்து வரும் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிச்சயம் இது உபயோகமான ஒரு அன்பு பரிசாக இருக்கும் என்று பலதரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்த “Bluetooth Earphone-கள்” ItsRainingRaincoast தன்னார்வலர்களால் விநியோகிக்கப்பட்டன, மேலும் சிறப்பானதொரு பரிசை பெற்ற தொழிலாளர்களும் நன்றியுடன் காணப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றது.
News Source : ItsRainingRainCoat Facebook Page
அந்த குழுவின் கூற்றுப்படி “புளூடூத் இயர்போன்கள் உண்மையில் தொழிலாளர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு பொருளாக உள்ளது” என்று கூறியது. மேலும் அவர்களால் அவற்றை வாங்க முடியாது என்றாலும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசவும், இசையைக் கேட்பதற்கும், ஆன்லைன் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிங்கப்பூரில் விடுமுறை சீசன் விரைவில் வரவிருக்கும் நிலையில், ItsRainingRaincoats தொடர்ந்து நான்காவது ஆண்டாக தனது கிறிஸ்துமஸ் முயற்சியைத் தொடங்கியுள்ளது. அவர்களின் ‘We Have A Dream’ என்ற பிரச்சாரம் 10 டிசம்பர் 2021 முதல் 2022 ஜனவரி 10 வரை சிங்கப்பூரில் உள்ள 7,50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளை வழங்கும் விதமாக பரிசுகளை வழங்கவுள்ளது.