சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (நவம்பர் 28) சிராங்கூன் பகுதியில் மூன்று வயதுச் சிறுமி, அந்த பகுதியில் இருந்த ஒரு வளர்ப்பு மயிலால் தாக்கப்பட்ட நிலையில் அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் மோசமாக வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி, சிராங்கூன் கார்டனில் உள்ள ஹவுஸ் பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்து தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மயிலைப் பார்ப்பதற்காக ஒரு வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தாள், என்று அந்த சிறுமியின் தாய் கூறினார்.
இதையும் படியுங்கள் : டிசம்பர் 3 முதல் கடுமையாகும் சிங்கப்பூரின் எல்லை நடவடிக்கை – Detailed Report
அப்போது மயில் வெளியே வந்து சிறுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசுகையில், 40 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமியின் தந்தை திரு. ஜூ ஹான் பேசியபோது : “முதலில் அந்த மயில் சில அடிகள் ஏன் குழந்தையை நோக்கி எடுத்து வைத்ததைக் கண்டேன், உடனடியாக நான் அவளை நோக்கிச் செல்ல விரும்பி விரைந்தேன்.
அந்த மயில் தாக்க தொடங்கியதும் உடனடியாக நான் என் மகளை இருக்க பற்றிக்கொண்டு, தரையில் எனது இடது முட்டி மற்றும் தோள்பட்டை படும்படி படுத்துக்கொண்டேன். மேலும் தாக்கிய அந்த மயிலை எனது வலது கையால் அடித்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் சில முறை எங்கள் மீது பாய்ந்தது. உடனடியாக அதன் உரிமையாளர் வந்து அந்த மயிலை அதன் பின்பகுதியை பிடித்து இழுத்தார். “மிருகக்காட்சிசாலையிலோ அல்லது சென்டோசாவிலோ அடிக்கடி மயில்கள் நடமாடுவதைப் பார்ப்பதால் நான் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். இது இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
முகத்தில் இன்னும் தையல் போடப்பட்டுள்ள தனது மகள் நலமுடன் இருப்பதாக திரு. ஹான் கூறினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், ஒரு மயில் இப்படி கொடூரமாக தாக்குவதை நாங்கள் இதுவரை கண்டதில்லை என்று கூறியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சற்று கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Nature Society-யின் பறவைக் குழுவின் தலைவர் திரு. டான் கிம் சியோங், மயில்கள் ஆக்ரோஷமான உயிரினங்களாக இருக்கலாம் என்று கூறினார், சென்டோசாவில் கார்களைத் மயில்கள் தாக்கிய சம்பவங்கள் உண்டு என்றார் அவர். “தங்கள் எல்லைக்குள் ஊடுருவுவதாக நம்பி, அவர்களை துரத்துவதற்குத் தாக்கும் என்றும் அதன் எல்லையை காக்க, முக்கியத்துவம் வாய்ந்த எதையும் அவை தாக்கக்கூடும்” என்று திரு டான் கூறினார்.