தமிழகத்தில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான மனிதர்களில் பலர் உண்டு, அதில் ஒருவர்தான் டிக் டாக் புகழ் ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சூர்யா. இந்நிலையில் சென்னையில் வசிக்கும் தனம் என்ற பெண்மணி டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா அவர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சூர்யா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறிய பொழுது “தங்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும்பொழுது ஆன்லைனில் படித்து வருகின்றார்கள் என்றும். அப்பொழுது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா அவர்களுடைய ஆபாசமான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களும் அடிக்கடி வருவதாகும் கூறினார்.
இதுகுறித்து சூர்யாவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது தங்களையும் அவர் ஆபாசமாக திட்டியதாகவும் மேலும் தங்களுடைய தொலைபேசி எண்களை இணையதளத்தில் “பாலியல் தொழிலாளி” என்று கூறி பதிவு செய்துள்ளார் என்றும் புகார் அளித்துள்ளனர். மேலும் சூர்யா எனப்படும் இந்த பெண் கஷ்டத்தில் சிக்கியுள்ள பெண்களை கண்டறிந்து அவர்களை சிங்கப்பூர், மலேசியா, மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இறுதியாக, அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் தாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.