TamilSaaga

இந்தியா உள்பட பல நாடுகளுக்கு திறக்கப்படும் சிங்கப்பூர் VTL : “இந்த” சிக்கல் ஏற்பட வாய்ப்பு – Detailed Report

பெருந்தொற்று தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், சிங்கப்பூருக்கும் மலேசியாவின் கோலாலம்பூருக்கும் இடையில் தனிமைப்படுத்தப்படாமல் இனி பறக்க முடியும் என்பது அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் வாயிலாக நான் அறிந்ததே. இரு நாடுகளுக்கு இடையேயான தடுப்பூசி பயணப் பாதை (VTL) நவம்பர் 29 அன்று திறக்கப்படும் என்று அதிர்க்கரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பின்லாந்து, ஸ்வீடன், இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடனான VTLகள் அன்றைய தினமே (நவம்பர் 29) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான VTL வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் மேலும் தளர்வுகள் எப்போது வழங்கப்படும்”

சிங்கப்பூர் வர விரும்பும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ள இந்த தருணத்தில், இந்த VTL எனப்படும் தடுப்பூசி போடப்பட்ட அதே சமயம் தனிமைப்படுத்துதல் இல்லாத பயணப்பாதையில் சில குறைபாடுகள் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இதுகுறித்து Straight Times நாளிதழில் வெளியான தகவலை இங்கு காணலாம். சிங்கப்பூர் குடியரசில் நுழையும் பயணிகள், வருகையின்போது பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் தங்கள் சொந்த மருத்துவ கட்டணத்தை செலுத்த நேரிடும் என்ற சிக்கல் தான் அது.

இந்நிலையில் நம்மிடையே எழும் முதல் கேள்வி, “தற்போது யாருடைய முழு பெருந்தொற்று மருத்துவக் கட்டணங்களும் அரசாங்கத்தால் (சிங்கப்பூர்) செலுத்தப்பட்டுள்ளன?” என்பது தான். அதற்கு பதில் என்னவென்றால் “அனைத்து சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் (PR-க்கள்) மற்றும் நீண்டகால பாஸ் (LTP) வைத்திருப்பவர்கள் (தடுப்பூசி போடாதவர்கள் உட்பட). அதே போல வெளிநாடுகளில் இருந்து திரும்பும்போது பெருந்தொற்று பாதித்திருந்தால் அவர்களின் செலவை அரசு ஏற்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

அடுத்து நம் மனதில் எழும் கேள்வி என்னவென்றால் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் எந்தச் சூழ்நிலையில் தங்கள் சொந்த பெருந்தொற்று மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்? என்பது தான். அதற்கான பதில் “குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் SafeTravel இணையத்தளத்தின்படி, சிங்கப்பூரர்கள், PRகள் மற்றும் LTP வைத்திருப்பவர்கள், சிங்கப்பூருக்கு வந்த 14 நாட்களுக்குள் வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்தாலோ அல்லது அறிகுறிகள் தென்பட்டாலோ அவர்களின் மருத்துவக் கட்டணங்களுக்கான அனைத்துக் கட்டணங்களுக்கும் அவர்களே பொறுப்பாகும்” என்று கூறியுள்ளது.

அதேபோல சிங்கப்பூரில் தங்கியிருக்கும் போது எந்த நேரத்திலும் பெருந்தொற்றுக்கு நேர்மறை சோதனை நடந்தால், அனைத்து குறுகிய கால விசிட் பாஸ் வைத்திருப்பவர்களும் தங்களுடைய மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

VTL திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் சிங்கப்பூரர்கள், PRகள் மற்றும் LTP வைத்திருப்பவர்களுக்கு இந்த பில்லிங் நடவடிக்கை பொருந்துமா? என்றால் அதற்கு பதில் ஆம் செலுத்த வேண்டும் என்பது தான், அதாவது சிங்கப்பூருக்குள் நுழைய எந்த பயணப் பாதையைப் பயன்படுத்தினாலும், அதன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பில்லிங் நடவடிக்கை பொருந்தும்.

சரி இந்த மருத்துவக் கட்டணம் எவ்வளவு ஆகும்? என்றால் Straight Times-ன் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சகம் (MOH) அளித்த பதிலின்படி, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கான சராசரி கடுமையான மருத்துவமனை பில் அளவு 25,000 வெள்ளி வரை ஆகும். “சோதனை செய்யப்பட்ட அரசாங்க மானியங்கள் மற்றும் மெடிஷீல்டு லைஃப் கவரேஜ் ஆகியவை மானியம் அளிக்கப்பட்ட வார்டுகளில் தகுதியான சிங்கப்பூரர்களுக்கு பில் தொகையை 2,000 முதல் 4,000 வெள்ளி வரை குறைக்கலாம்” என்று MOH செய்தித் தொடர்பாளர் ST நிறுவனத்திடம் கூறினார்.

Related posts