TamilSaaga

இடம் தேடி அலையும் மாணவர்கள் : இரண்டுவார அவகாசம் கொடுத்த பல்கலைகழகம்

சிங்கப்பூரில் பிரபல நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறி வெளியில் உள்ள தங்கும் இடங்களை தேர்வு செய்வதற்கு அவர்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தங்கி இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டி இருப்பதால். பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக மாணவர்களிடம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து பயிலும் மாணவர்கள் தங்குவதற்கு வேறு இடங்களை பெறுவதில் சற்று சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தங்கும் இடங்களுக்கான இடங்களை தேடுவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வளாகத்தில் தங்குவதற்கு விண்ணப்பித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருக்கும் மாணவர்களும் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts