சிங்கப்பூரில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 1) யிஷுனில் உள்ள வீட்டு வசதி வாரியத் தொகுதியில் நீர்க் குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக சுமார் ஐந்து மாடி அளவிற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது பெரும் நீர் விரயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பிளாக் 263, யிஷுன் தெரு 22-ல் குழாய் கசிவு ஏற்பட்டதாக தேசிய நீர் நிறுவனமான PUB தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக பழுதுபார்க்கும் பணிகளைச் செய்ய அதன் சேவைக் குழுவினரை அனுப்பியது – மேலும் அந்த இடத்தில் இரண்டாவது கசிவு கண்டறியப்பட்ட பின்னர் அவர்களுடைய பணி திங்கள் பிற்பகல் வரை நீட்டிக்கப்பட்டது.
இதனையடுத்து இணைப்புக் குழாய் பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டதால் இரண்டு வீடுகளின் நீர் விநியோகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஆனால் சம்பவத்தின் போது ஒரு வீட்டின் உறுப்பினர்கள் மட்டுமே வீட்டில் இருந்ததாக சீன நாளிதழ் Lianhe Wanbao செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர், திரு Zhuo Shu Ye வயது 79, வான்பாவோவிடம், காலை 6.30 மணியளவில் தனது குழாயைத் திறக்க முயன்றதாகவும், ஆனால் தண்ணீர் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மூன்றாவது மாடியில் வசிக்கும் 79 வயதான பகுதி நேர துப்புரவுத் தொழிலாளிக்கு PUB-ல் இருந்து ஒரு நோட்டீஸ் மற்றும் நான்கு தண்ணீர் பைகள் கிடைத்தன என்று கூறினார். மேலும் “மதியம், PUB ஊழியர்கள் தண்ணீர் சீராக செல்வதை உறுதி செய்வதற்காக குழாயை ஆன் செய்யச் கூறினார். ஆனால் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் தண்ணீர் துண்டிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார். ஆரம்பத்தில் நண்பகலில் பழுதுபார்க்கும் பணிகளை முடித்த பிறகு, அதே இணைப்புக் குழாயில் இரண்டாவது கசிவை அதன் குழுவினர் கண்டறிந்ததாக PUB தெரிவித்துள்ளது.
“நாங்கள் விரைவாக கசிவுகளை சீர்செய்தோம் மற்றும் அனைத்து பழுதுபார்க்கும் பணிகளும் அதே நாளில் மாலை 4.40 மணிக்கு முடிக்கப்பட்டன,” என்று PUB கூறியது.