சிங்கப்பூரில் கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் உள்ள நிறுவனங்கள் தற்போது எதிர்கொள்ளும் மனிதவள நெருக்கடியைத் தணிக்கவும், பணி அனுமதி வைத்திருப்பவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலை மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளால் பல நிறுவனங்கள் மனிதவள நெருக்கடியை எதிர்கொள்கின்றன. கப்பல் கட்டும் தளம் மற்றும் செயல்முறைத் துறைகளுக்கு தக்கவைப்புத் திட்டத்தை விரிவுபடுத்த மனிதவள அமைச்சகத்தின் (MOM) புதிய நடவடிக்கைகளை MWC வரவேற்கிறது என்று Migrant Workers Centre வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
Migrant Workers Centre முகநூல் பதிவு
சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கத்துடன் இணைந்து கட்டுமானத் துறையில் உள்ள நிறுவனங்களுக்காக தொழிலாளர் தக்கவைப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இன்றுவரை 52 நிறுவனங்கள் இதன்முலம் பயனடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. “இது எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக புதிய தொழிலாளர்களின் வரவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கட்டுமானத் துறையில் தொழிலாளர்களின் வெளியேற்றத்தை மிதப்படுத்த உதவியது” என்று MOM தெரிவித்தது.
கட்டுமானத் துறைக்கான திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கும். தற்போது, வருங்கால முதலாளிகள் பணி அனுமதி காலாவதியாகும் 21 முதல் 40 நாட்களுக்குள் அசல் முதலாளியின் அனுமதியின்றி பணி அனுமதி வைத்திருப்பவரை பணியமர்த்தலாம்.