TamilSaaga

மேலும் மூன்று நாடுகளுக்கு சேவையை நீட்டிக்கும் Scoot மற்றும் SIA : எந்தெந்த நாடுகள்? – Full Detail

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) வரும் நவம்பர் 8 முதல் மெல்போர்ன், சிட்னி மற்றும் சூரிச் ஆகியவற்றிலிருந்து தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) விமானங்களை இயக்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. VTL எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பயண ஏற்பாடானது மேலும் ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்த நிலையில் SIA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மெல்போர்னிலிருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரண்டு விமானங்கள், SQ218 மற்றும் SQ228 ஆகியவை VTL சேவைகளாக நியமிக்கப்படும் என்று SIA நேற்று செவ்வாயன்று (அக்டோபர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் இருமுறை VTL விமானங்களை இயக்கும் அவை SQ212 மற்றும் SQ222 ஆகியவையாகும். ஜூரிச்சிலிருந்து சிங்கப்பூருக்கு தினசரி சேவையான SQ345 VTL விமானமாகச் செயல்படும் என்று SIA மேலும் கூறியது.

மேலும் Scoot விமான சேவை நிறுவனம் மெல்போர்னில் இருந்து தினசரி VTL சேவைகளை இயக்கும் (TR19), வாரத்திற்கு நான்கு முறை சிட்னியில் இருந்து இந்த சேவை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. SIA ஆல் இயக்கப்படும் VTL விமானங்களுக்கான விமான அட்டவணைகள் அந்த விமான நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைத் திட்டத்தின் கீழ், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன் கடந்த 14 நாட்களில் பயணிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட VTL நாடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts