சிங்கப்பூரின் தடுப்பூசி பயணப்பாதை திட்டம் மேலும் 9 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதை தொடர்ந்து வெளிநாடு செல்ல திட்டமிடும் சிங்கப்பூரர்கள், பெரும் தொற்று தளர்வு பயணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள். (அக்டோபர் 12ஆம் தேதி வரை உள்ள நடைமுறைகளின் படி)
1) பயணத்திற்கு முன்னரே PCR சோதனைக்கு எவ்வாறு பதிவு செய்து பணம் செலுத்துவது?
பயணத்திற்கு முன்னரே பயணிகள் எந்த நாட்டிற்கு போக இருக்கிறார்களோ அந்த நாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தொற்று தடுப்பூசிகள், சோதனைகள் குறித்த சான்றிதழ்கள் எவை என தெரிந்துகொண்டு, குடிவரவு ஆணையம் அல்லது தூதரகத்துடன் அவைகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பயணத்திற்கு முன்னரே எடுக்கப்பட வேண்டிய பரிசோதனைகள் குறித்த அனைத்து தகவல்களையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் வழங்குகிறது.
புறப்படுவதற்கு முன்னதாக செய்ய வேண்டிய பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்ய பரிசோதனை வழங்குநர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
இப்போது பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிற நாடுகளை பொறுத்தவரை, அந்தந்த நாடுகளின் அறிவிப்புகள், கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தேவையான பரிசோதனை விபரங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் அவைகளில் ஏற்படுகிற மாற்றங்களையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
2) பயண காப்பீட்டுக்கு அதிக செலவாகுமா? எந்த மாதிரியான காப்பீட்டு பாதுகாப்பு தேவை?
காப்பீடுகளை பொறுத்தவரையில் இந்த பெருந்தொற்று காலத்தில் பயணக் காப்பீடு விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன என்பதை மறுக்க முடியாது. பயணக் காப்பீடு நிறுவனங்களின் குறிப்புகள் படி, 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 35 சதவிகிதமும், 51 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 63 சதவீதம் வரையும் செலவுகள் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
உதாரணமாக பத்து நாள் பயணத்திற்கான காப்பீடு தொற்றுநோய்க்கு முன்பு 51 வயது உடையவருக்கு 99 சிங்கப்பூர் டாலர்கள் செலவாகும். இப்போது அதன் விலை 156 சிங்கப்பூர் டாலர்கள். தென் கொரியாவில் தொற்று தொடர்பான மருத்துவ சிகிச்சை, மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வதற்கு குறைந்தபட்சம் 34,000 டாலர்கள் வரை பயணக் காப்பீடு தேவைப்படுகிறது. இதேபோன்று ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்றவாறான காப்பீட்டு திட்டங்கள் செலவுகள் குறித்த அட்டவணைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை பயணம் ரத்து செய்யப்பட்டால், அல்லது ஒத்தி வைக்கப்பட்டால், அல்லது குறைக்கப்பட்டால், அதற்கு தேவையான இழப்பீடுகளை பற்றியும் காப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
3) பயணிகள் புறப்படுவதற்கு முன்னதாக எடுக்கக்கூடிய சோதனையில் தோற்று கண்டறியப் பட்டால் என்ன ஆகும்?
தொற்று பரவுவதை தடுக்க பயண தேதியிலிருந்து 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் விமானத்தில் ஏறுவதை விமான நிறுவனங்கள் தடை செய்கின்றன.
4) Sinoform தடுப்பூசி அங்கீகரிக்கப்படுமா?
தற்போது VTL திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நாடுகளும் இங்கு வழங்கப்படும் Pfizer – BioNTech மற்றும் Moderna தடுப்பூசிகளை அங்கீகரிக்கின்றன. இருப்பினும் சில நாடுகள் Sinoform போன்ற மாற்று தடுப்பூசிகளை அங்கீகரிக்கவில்லை. தற்போது நெதர்லாந்து, ஸ்பெயின், மற்றும் சியோல் மட்டுமே இந்த தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட பயணிகளை உள்ளே நுழைய அனுமதிக்கின்றன.
5) குளிர்கால அலை (Winter Wave) என்பது என்ன? பயணம் மேற்கொள்வதற்கு அது இடையூறை ஏற்படுத்துமா?
ஆண்டின் இறுதியில் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் போது சளி காய்ச்சல் போன்ற சுவாச வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் என்பதால் இது குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டின் இறுதியில் குளிர்காலத்தில் தான் அமெரிக்கா தினசரி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகளின் உச்சத்தை தொட்டது. இது அச்சுறுத்தல் தான் என்றாலும் தடுப்பூசிகள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
6) புதிய VTL திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சிங்கப்பூர் செல்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்?
இப்போதுதான் வெளிநாட்டு பயணங்களுக்கான ஆரம்ப நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளை விட சிங்கப்பூரர்கள், குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாடுகளில் வெகுநாட்களாக இருக்கக்கூடிய வெளிநாட்டவர்கள், ஆகியோர் முதல்கட்டமாக இந்த திட்டத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இனி வருகின்ற நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சிங்கப்பூருக்கு மிக அருகில் இருப்பதால் தென்கொரிய பார்வையாளர்களின் வரவு முதல்கட்டமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.