சிங்கப்பூரில் பிபிடி லாட்ஜ் 1 பி விடுதியில் வசிக்கும் 8,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலருக்கு, 47 வயதாகும் திரு. லெட்சுமணன் முரளிதரன் மொழிபெயர்ப்பாளராக மற்றும் ஒரு நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்து வருகின்றார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர் புங்கோல் பகுதியில் உள்ள S11 டார்மிட்டரி என்றும் அழைக்கப்படும் இந்த தங்குமிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பூட்டப்பட்டபோது, இந்தியாவிலிருந்து கட்டுமானத் தொழிலாளி உணவு விநியோகிப்பதற்கும் குடியிருப்பாளர்களுக்கிடையேயான மொழி இடைவெளியைக் குறைப்பதற்கும் முன் வந்தார் முரளிதரன்.
கடந்த 18 மாதங்களில், சக ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க அல்லது அவர்களுக்கு சமீபத்திய அரசாங்க அறிவிப்புகளை மொழிபெயர்க்க அவர் உதவி வருகின்றார். இப்போது, அவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவராக தன்னுடைய சகாக்களுக்கான சமூக ஆதரவு அமைப்பை வலுப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள 1200 தன்னார்வலர்களில் ஒருவராக பணியாற்றி வருகின்றார். இந்த தன்னார்வலர்களின் நெட்வொர்க், Friends of ACE என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார்.
இந்த குழுமம் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, மனிதவள அமைச்சகம் (MOM) இங்கு 300 குடியிருப்புகளிலிருந்து பல்வேறு தேசிய தொண்டர்களை நியமித்துள்ளது. இந்த நெட்வொர்க் மூலம் சுமார் 2,00,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அல்லது 75 % தங்குமிடங்களில் வசிக்கும் அனைத்து தொழிலாளர்களையும் அடைய முடியும் என்று MOM தெரிவித்துள்ளது. மேலும் இந்த தன்னார்வலர்கள் தங்கள் சக ஊழியர்களுக்கு, அமைச்சகத்தில் பிரச்சினைகளை எழுப்புவதை எளிதாக்க உதவுவார்கள்.
அவர்கள் தங்குமிடங்களில் அரசாங்கத்தின் விரிவாக்க முயற்சிகளை ஊக்குவிப்பார்கள் மற்றும் தொழிலாளர்கள், சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க உதவுவார்கள். அனைத்து தன்னார்வலர்களும் அடிப்படை மனநல பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் அடிப்படை முதலுதவி திறன்களைக் கற்றுக்கொள்வார்கள். ஆர்வமுள்ளவர்கள் உளவியல் முதலுதவி பயிற்சியையும் எடுக்கலாம். “”தன்னார்வத் தொண்டு செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் 1996ல் சிங்கப்பூருக்கு வந்தேன், சிங்கப்பூர் எப்போதும் எனக்கு ஆதரவளித்து வருகிறது. அதனால் நான் உதவி செய்வதில் கவலை இல்லை,” என்று முரளிதரன் கூறினார்”