சிங்கப்பூரில் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்து, அந்த 30 வயது பெண்ணின் தொலைபேசியை திருடி, அந்த தொலைபேசியில் இருந்து அவரது மேற்பார்வையாளருடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டுபிடித்துள்ளார். மேலும் அந்த படங்களையும் வீடியோக்களையும் கைப்பற்ற அவர் தனது சொந்த தொலைபேசியைப் பயன்படுத்தி, இன்னொருவருடன் தனது மனைவி இருந்த நெருக்கமான புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். மற்றவர்கள் “தன்னைப் போன்று ஆகிவிடக்கூடாது” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்க பெயரிட முடியாத அந்த 27 வயது நபர், திருட்டு மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) ஒப்புக்கொண்டார். அவரது தண்டனையில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் குற்றம் நடந்த நேரத்தில் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததாக நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர்கள் ஒன்றாக வாழவில்லை. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 6, 2020 அன்று, பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரது கழிவறையை பயன்படுத்திக்கொள்ள அவரிடம் கேட்டுள்ளார்.
கழிவறையை பயன்படுத்திய அவர், அந்த வீட்டின் ஓய்வறையில் இருந்த அவரது மனைவியின் கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். தனது மனைவி இன்னொருவருடன் தொடர்பில் உள்ள என்ற சந்தேகம் அவருக்கு இருந்த நிலையில் அவர் அந்த போனை திருடியுள்ளார். மேலும் அந்த போனில் பாதிக்கப்பட்டவரின் மார்பின்மேலாடை இல்லாத நான்கு வினாடி கிளிப், அந்த பெண்ணின் முகம் ஓரளவு தெரியும் புகைப்படம், 16 வினாடிகள் அந்த பெண் முழுமையாக நிர்வாணமாக இருக்கும் வீடியோ மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தனது மேற்பார்வையாளருடன் உடலுறவு கொள்வது போன்ற படங்கள் இருந்தன.
சிறிது நேரத்தில் அந்த நபர் அவரது மனைவியிடம் அந்த போனை திரும்பக்கொடுத்துவிட்டு ஏதும் பேசாமல் திருத்துச்சென்றுள்ளார். மேலும் பிப்ரவரி 12, 2020 அன்று காலை 8 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் அந்தரங்க படங்களை பேஸ்புக்கில் வெளியிட முடிவு செய்தார். எனக்கு நேர்ந்தது யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்று கூறி, அவர் அந்த பதிவை “PUBLIC” என்ற optionனோடு அவரது மனைவியின் மேற்பார்வையாளரின் பெயரையும் பணியையும் அந்த பதவியில் சேர்த்து வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலாகி, அன்று மாலை 4 மணியளவில் சுமார் 2,000 முறை பகிரப்பட்டது, சுமார் 3,000 லைக்குகள் மற்றும் 1,000 கமெண்டுகளை பெற்றது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அடுத்த மாதம் தண்டனைக்காக நீதிமன்றம் திரும்புவார்.