சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தொழிலாளர்களை இறக்குமதி செய்ததாக சந்தேகிக்கப்படும் 18 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. MOM வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) அன்று 12 மணி நேர அமலாக்க நடவடிக்கையை செய்ததாக கூறியது. இந்த அமலாக்க நடவடிக்கையில் தவறான அறிக்கைகள் மூலம் பெறப்பட்ட வேலை பாஸ்களில் வெளிநாட்டவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வருவதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோசடி கும்பல் சிக்கியது.
தீவு முழுவதும் சுமார் 22 இடங்களில் இந்த அமலாக்க நடவடிக்கை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு வெளிநாட்டவர் சட்டவிரோதமாக வேலை பாஸ் பெற முயன்ற தகவல் கிடைத்தவுடன் ஜூலை மாதத்தில் தனது விசாரணையை தொடங்கியதாக MOM கூறினார். சில மாதங்களில் விரிவான பகுப்பாய்வுகளின் மூலம், முறையான வணிக செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், வேலை பாஸுக்கு விண்ணப்பிக்க பல ஷெல் நிறுவனங்களை அமைத்ததாக சந்தேகிக்கப்படும் மோசடி குழுவை அமைச்சகம் கண்டுபிடித்தது.
இத்தகைய மோசடி கும்பல்கள் பொதுவாக சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர்களை CPF பங்களிப்புகளை “பாண்டம் உள்ளூர் தொழிலாளர்கள்” ஆகப் பெறுகின்றன. வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களின் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக உயர்த்துவதற்காக இவ்வாறு அவர்கள் செய்வதாக, MOM தெரிவித்துள்ளது. பிறகு உயர்த்தப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில், நிறுவனங்கள் வெளிநாட்டினருக்கான வேலை பாஸுக்கு தவறான அறிவிப்புகள் மூலம் விண்ணப்பித்து அவர்களிடமிருந்து கிக் பேக் வசூல் செய்யும்.
இதன் விளைவாக வெளிநாட்டினர் சட்டவிரோதமாக பெறப்பட்ட வேலை பாஸ் வழியாக சிங்கப்பூரில் நுழைந்து தங்குவார்கள். வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் (EFMA) கீழ், இல்லாத வணிகத்தில் வேலை பாஸைப் பெற்ற குற்றவாளிகளுக்கு 6,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். இரண்டு வருடங்கள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தடியடியும் வழங்கப்படும்.
அதேபோல சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு 30,000 வெள்ளி வரை அபராதம், 12 மாதங்கள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன், அவர்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் தகுதியை இனி செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் செல்லுபடியாகாத வேலை பாஸ் இல்லாமல் சிங்கப்பூருக்கு வேலைக்குவரும் வெளிநாட்டவர்களுக்கு 20,000 வெள்ளி வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன், அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள்.