TamilSaaga

எங்’ஸ் வாண்டான் நூடுல் – சிறு சிக்கலுக்கு பின் மீண்டும் திறக்க அனுமதி

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 28) தஞ்சோங் கடோங் சாலையில் உள்ள பிரபல எங்’ஸ் வாண்டான் நூடுல் (Eng’s Wantan noodle) கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் உணவு பாதுகாப்பு நிறுவனமான Singapore Food Agency மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் இந்த உணவு நிலையம் கடந்த மே 18ம் தேதி மூடப்பட்டது.

இந்த உணவகத்தில் கடந்த மே 14 முதல் 17க்கு இடையில் உணவு உட்கொண்ட சுமார் 68 பேர் இரைப்பை சம்மந்தமான சில சிக்கல்களை சந்தித்துள்ளனர். மேலும் இதுகுறித்து MOH மற்றும் SFA பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த கடையை மூட உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த சம்பவத்தில் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. சில சாதாரண சிக்கல்களை மட்டுமே அவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அந்த கடையில் நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த உணவு கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts