TamilSaaga

“சிங்கப்பூரில் 21 வயது நிரம்பிய இளம் போலீஸ் அதிகாரி” – கழிவறையில் இறந்துகிடந்த பரிதாபம்

சிங்கப்பூரில் நேற்று ஆகஸ்ட் 30ம் 2021 அன்று குயின்ஸ்வேயில் உள்ள சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையத்தில் (SOC)யில் 21 வயது நிரம்பிய ஒரு முழுநேர காவல்துறை தேசிய சேவையாளர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆகஸ்ட் 31ம் தேதி காலை 10.30 மணியளவில் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அந்த பணியாளர் பணிக்குச் சென்றதாகவும். ஆயுதக் கிடங்கில் இருந்து தனது சேவை ரிவால்வரை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அவர் காலை 11 மணியளவில் SOCல் உள்ள கழிப்பறையில் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தனியாக காணப்பட்டார். அவருக்கு அருகில் அவரது சர்வீஸ் ரிவால்வர் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே காலை 11.20 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். மேலும் குற்றப் புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த விஷயத்தில் எந்தவித தவறான செயலும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் மறைந்த சேவையாளரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர்களின் துயரத்தின் போது குடும்பத்திற்கு உதவுகிறோம். என்று கூறியுள்ளனர்.

Related posts