உரிய ஆவணங்கள் இன்றி சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர் குடிநுழைவு துறை அதிகாரிகள். இவர்கள் ஐவரும் துவாஸ் கடல் எல்லைக்கு அப்பால் உள்ள இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமெராக்கள் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விரைந்து விசாரணை நடத்துமாறு குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
21 முதல் 38 வயது மதிக்கத்தக்க இந்த ஐந்து பேரும் Lube Park படகுத்துறைக்கு நீந்திச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவர்களுக்கு 6 மாத சிறை மற்றும் 3 பிரம்படிகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அச்சம் உலகை ஆட்டிப்படைக்கும் நிலையில் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக வருபவர்கள் குறித்து தீவிரமாக சோதணை நடைபெறுகின்றது.