TamilSaaga

“இந்தியாவின் நாக்பூரில் செயல்படும் IIM” – இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரில் திறக்க வாய்ப்பு

அண்டை நாடான இந்தியாவின் நாக்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் நாக்பூர் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) சிங்கப்பூரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது கிளையை தொடங்க ஒரு திட்டத்தை அமைத்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உள்ள புனேவில் தனது இரண்டாவது வளாகத்தை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அது வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். மேலும் இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவின் ஹைதராபாத்திலும் மற்றொரு வளாகத்தைத் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. IIM நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான புனீத் புஷ்கர்ணா தற்போது இங்கு சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும்.

புனீத் புஷ்கர்ணா அவர்களின் உதவியோடு விரைவில் சிங்கப்பூரில் IIT துவங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மற்ற ஐஐஎம்-கள் தங்கள் கிளைகளை வெளிநாடுகளில் திறந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களால் அங்கு நீடிக்கமுடியவில்லை, இருப்பினும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

indian institute of management என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் அண்டை நாடான இந்தியாவின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts