சிங்கப்பூரில் 23 குற்றவாளிகள், 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொழிலாளர்களை லாரிகளில் நிழலற்ற அல்லது போதிய இடமில்லாத வகையில் அழைத்து சென்றமைக்காக பிடிபட்டனர்.
23 குற்றவாளிகளும் தங்கள் லாரிகளில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றபோது, விதானங்கள் இல்லாத அல்லது அனைத்து தொழிலாளர்களுக்கும் தங்குமிடம் போதுமானதாக இல்லாமல் அழைத்து சென்றார்கள் என்று போக்குவரத்து மூத்த அமைச்சர் ஆமி கோர் நேற்று (ஆகஸ்ட்.02) கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு முதல், அனைத்து லாரிகளும் பயணிகளை தங்கள் பின் தளங்களில் ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறு ஏற்றிச்செல்லும் போது போதிய நிழலோ அல்லது இடமோ இல்லாமல் விதிமுறைகளை தவறினால் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும், முதல் முறை குற்றவாளிகளுக்கு S $ 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் பின்பு மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் இதனை செய்தால் இந்த தண்டனைகள் இரட்டிப்பாகும்.