இந்து வியாழக்கிழமை காலை அலாஸ்கன் தீபகற்பத்தின் கடற்கரையில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2018ம் ஆண்டுக்கு பிறகு அலாஸ்க்கா பகுதியில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையைத் ஏற்படுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
யு.எஸ்.ஜி.எஸ் ஆய்வுகளின்படி, இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் அலாஸ்க்கா தீபகற்பத்தில் பெர்ரிவில்லிலிருந்து தென்கிழக்கே 50 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் சுற்றி உள்ள கட்டிடங்கள் மிகவும் பயங்கரமாக குலுங்கின.
இதனால் வீடுகளுக்கு உள்ளே இருந்த மக்கள் பீதி அடைந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் பல மணி நேரத்திற்கு அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் அந்த பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்த எச்சரிக்கையில் “அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மரீனா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு உள்ள மக்களை கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் தற்போது அலாஸ்கா தீவுகளில் மிகக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.