நமது சிங்கப்பூரில் ஒரு தொடக்கப்பள்ளியில நடந்த சம்பவத்தப் பற்றி கேள்விப்பட்டீங்களா? அங்க பணியாற்றி வந்த துணை தலைமையாசிரியர் ஒருவர் தற்போது வசமாக சிக்கியிருக்கிறார். என்னன்னு கேக்குறீங்களா?
இந்த துணை தலைமையாசிரியர் அதே பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவரோட அம்மாவோட தகாத உறவு வச்சிருந்தாராம். இது எப்படி வெளிய தெரியும்னா, யாரோ இவங்க ரெண்டு பேரும் பொது இடத்துல சந்திச்சத புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்கள்ல போட்டுட்டாங்க. அதுவும் அந்த துணை தலைமை ஆசிரியரின் மனைவியே இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுட்டாங்க.
மேலும் படிக்க – சிங்கப்பூரில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த “சம்பவம்”! (Video)
.
அதோட கூட, இவங்க ரெண்டு பேரோட மெசேஜ் உரையாடல்களையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டிருந்தாங்க. மேலும், “இந்த பெண் தான் எங்க குடும்பத்தையே உடைச்சுட்டாங்க” என்றும் உருக்கமுடன் பதிவிட்டிருக்கிறார்.
இந்த விஷயம் அக்டோபர் 18 அன்னைக்கு வெளிய வந்துடுச்சு. உடனே சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் இதப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுடுச்சு. இந்த சம்பவத்துக்கு அப்புறம், அந்த துணை தலைமையாசிரியர் தன்னோட ராஜினாமாவ கொடுத்துவிட்டு, இப்போது விடுமுறையில் சென்றுவிட்டதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.