GE Vernova Inc. என்பது ஆற்றல் உபகரண உற்பத்தி மற்றும் அதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். GE Vernova 2024 ஆம் ஆண்டு ஜெனரல் எலெக்ட்ரிக் (General Electric) நிறுவனத்தின் மின்உற்பத்தி பிரிவுகளான GE Power, GE Renewable Energy, மற்றும் GE Digital ஆகியவற்றின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை உருவாக்கி அதற்கான பராமரிப்பு சேவைகளையும் வழங்கும் சிறந்த நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் Cambridge, Massachusetts-ல் அமைந்துள்ளது.
மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான இது 2024 ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டுள்ள GE Vernova Inc. நிறுவனத்தில் தற்பொழுது ஏராளமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்புகள் இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட இணையத்தளத்தில் Search & Apply என்ற பொத்தானைக் க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில் City என்ற இடத்தில் singapore என கிளிக் செய்தால் சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகள் அனைத்தும் அங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். Engineer, Technician, Shift In charge போன்ற ஏராளமான வேலை வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கான வேலைவாய்ப்பை தேர்ந்தெடுத்து, அதில் உள்ள அனைத்து தகவல்களையும் நன்றாக படித்தறிந்து பின் வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
அதில் மேலே வலது புறத்தில் உள்ள Apply Now என்ற பொத்தானைக் க்ளிக் செய்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் இந்த வலைதளத்தில் உங்களுக்கான கணக்கு துவங்கப்பட வேண்டும். பின்னர் வேலைவாய்ப்புகளைத் தேடி Apply Now என்ற பொத்தானைக் க்ளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இது தவிர linkedIn தளத்திலும் இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எப்படி உங்களுக்கான வேலை வாய்ப்பை சரியாக கண்டறிந்து நேர்காணலில் வெற்றி பெறுவது என்பதைக் குறித்த பதிவு நமது தமிழ் சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://tamilsaaga.com/news/how-to-apply-for-a-job-effectively/ என்ற லிங்க்-கை க்ளிக் செய்யவும்!