TamilSaaga

சிங்கப்பூரில் எந்த துறையில் பணியாற்ற, எந்த Employment agency ஐ அணுகலாம் ?

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் Employment agency களை ஆன்லைன் மூலம் அணுக முடியும். Employment agency மூலமாக ஒரு நிறுவனத்தை தொடர்பு கொள்வதால் இரண்டு விதமான முக்கியமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன. ஒன்று, உங்களின் கல்வி தகுதி, திறமை ஆகியவற்றிற்கு ஏற்ற சரியான வேலையை கண்டறிய முடியும். மற்றொன்று, உங்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனத்தின் வரலாறு, நடைமுறை, தொழில், முதலாளி உள்ளிட்டவற்றை பற்றி நன்கு தெரிந்து, புரிந்து கொண்ட பிறகு அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

இது போன்ற பலன்களை பெறுவதற்கு நம்பகமான Employment agency களை தேர்வு செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படி சிங்கப்பூரில் நம்பக தன்மை வாய்ந்ததாக கருதப்படும் சில Employment agency கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த Employment agency களை பொருத்தவரை இவர்கள், ஆட்களை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ப்பதற்கு பணியாளர்களிடம் எந்த கட்டணமும் பெறுவது கிடையாது. மாறாக இந்த நிறுவனங்கள் வேலை வழங்கும் கம்பெனியின் முதலாளியிடம் மட்டுமே கட்டணத்தை பெறுகின்றன.

சிங்கப்பூரின் நம்பக தன்மையான Employment agency கள் :

  1. 3C synergy – இந்த நிறுவனம் கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இந்நிறுவனம் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஹாங்காங்கில் கிளைகளை வைத்து செயலாற்றி வருகிறது. 2007 ம் ஆண்டு முதல் ஆசியாவின் ரியல் எஸ்டேட், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைக்கு ஆட்சிகளை தேர்வு செய்து வருகிறது.
  2. Manpower – இந்நிறுவனம் ஐடி, இன்ஜினியரிங், வாடிக்கையாளர் சேவை, சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்பிற்காக ஆட்களை தேர்வு செய்து வருகிறது. உலகில் உள்ள தலைசிறப்பு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 70 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம் 80 நாடுகளில் அலுவலக கிளைகளை வைத்து செயலாற்றி வருகிறது. நிரந்த பணியாளர்களை தேர்வு செய்து அளிப்பதில் இது முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
  3. Robert Half -1948 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் வங்கி துறை, C-suite, senior management, finance, project consulting, technology போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. சிங்கப்பூர் மட்டுமின்றி ஹாங்காங், ஷங்காய் உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. அதோடு தங்களின் துறை சார்ந்த பல புதிய தகவல்களையும் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறது.
  4. PERSOLKELLY – ஆசியாவில் உள்ள மிகப் பெரிய வேலைவாய்ப்பு நிறுவனங்களில் PERSOLKELLY யும் ஒன்று. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் 2016ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, கொரியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் 80 க்கும் அதிகமான அலுவலகங்களை வைத்துள்ளது. இன்ஜினியரிங் உள்ளிட்ட 13 துறைகளில் இந்நிறுவனம் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
  5. Randstad – இந்நிறுவனம் பல துறைகளிலும் முன்னணி நிறுவனமாக இருந்தாலும் UI/UX design, cybersecurity ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது தவிர finance, sales, marketing உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts