TamilSaaga

சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களை எத்தனை வருடங்கள் வரை வேலை பார்க்க அனுமதிக்கிறது?

எந்த வெளிநாடுகளுக்கு நம்ம மக்கள் வேலைக்குப்போனாலும் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் அங்க வேலை செஞ்சுட்டு திரும்பி வந்து நம்ம ஊருல செட்டில் ஆகறத நாம பார்த்திருப்போம். 

இதுல அவங்க விருப்பப்பட்டும் திரும்பி வருவாங்க அல்லது அந்த வேலை முடிந்த பிறகும் திரும்ப வருவாங்க. சில நாடுகள்ல எத்தனை வருடங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் நாட்டில் குறிப்பிட்ட விசா கொண்டு வேலை செய்ய முடியும் என்று சில விதிகள வச்சிருப்பாங்க. 

அப்படி சிங்கப்பூரில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு என்னென்ன விதிகள் இருக்கும்? அல்லது நாம பணி ஒய்வு வரைக்கும் வேலை செய்யலாமா? குறிப்பிட்ட விசா கொண்டு எத்தனை வருடங்கள் வேலை செய்ய முடியும்? இது போன்ற கேள்வுகளுக்கான பதில்கள் தான் இந்த பதிவு! 

மற்ற நாடுகளை போலவே சிங்கப்பூரிலும் E-பாஸ், S-Pass, Work Permit, Dependant Visa, Entry Visa னு பல வகையான விசாக்கள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகையான விதிமுறைகளும் உண்டு. உயர்நிலை பதவி (மேனேஜர், நிர்வாகி போன்றவை), இரண்டாம் நிலை பணி (என்ஜினீயர், அலுவலக பணியாளர் போன்றவை) மற்றும் தொழிலாளர்கள் என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி ஊதியம் அதற்க்கு ஏற்ற சலுகைகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குகிறது. 

இந்த விசா-க்கள்அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமோ அல்லது ஏஜெண்டுகளோ விண்ணப்பித்து கொடுப்பாங்க. அதன்பிறகு இங்க வேலைக்கு வந்த பணியாளர்கள் முதல் முறை விசா மூலமா 2 ஆண்டுகாலம் வேலை செய்யலாம் அதற்க்கு பிறகு விசா-வை புதுப்பிக்க வேண்டும். 

புதுப்பிக்கப்பட்ட விசா மேலும் 3 ஆண்டு வரை செல்லுபடியாகும். இந்த கால கட்டத்துல ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறி விட்டார் என்றால் அந்த புதிய நிறுவனம் தங்கள் சார்பாக விசா விண்ணப்பம் செய்வர். 

இது பொதுவான நடைமுறை தான். இப்போ எத்தனை வருடங்கள் ஒரு ஊழியர் அங்க வேலை செய்ய முடியும்? என்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் சில வரைமுறைகளை வச்சிருக்கு. அதற்க்கு முதல்ல நம்ம எந்த நாட்டுல இருந்து போய் இருக்கோம்னு பாக்கணும்? என்னது-னு யோசிக்காதீங்க பதில் கீழ இருக்கு! 

சிங்கப்பூர் அரசாங்கம் குறிப்பிட சில நாடுகளில் இருந்து தான் ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியும். இத NTS- Non Traditional Resources னு சொல்லுவாங்க.  மலேசியா, PRC, NAS மற்றும் பல நாடுகளை இது உள்ளடக்கி இருக்கு.

1.மலேசியா 
2.PRC – People’s Republic of China (சீனா) 
3. NAS – North Asian sources – இதுக்கு கீழ மொத்தம் நான்கு நாடுகள் உள்ளன 
1.ஹாங் காங் 
2. மேக்ஃகு 
3. தென்கொரியா 
4.தைவான்

பிற NTS சார்ந்த நாடுகள்: 
1. பங்களாதேஷ்
2. இந்தியா
3. மியான்மர்
4. பிலிப்பைன்ஸ்
5. இலங்கை
6. தாய்லாந்து

இந்த பிரிவுகளைப் பொறுத்து ஊழியர்கள் வேலைக் காலம் மாறுபடும். அது மட்டுமல்ல இதுல எந்தெந்த நாடுகள்ல இருந்து எந்த வகையான ஊழியர்களை எடுக்க வேண்டும் என்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கம் பல விதிகள வகுத்து இருக்கு. 

அதன்படி எந்தெந்த துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு எந்தெந்த விதமான கால வரையறை என்பதை பாப்போம்! 

உற்பத்தி தொழிற்சாலை (Production Sector) ஊழியர்களுக்கு:

1.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த இரண்டாம் நிலை (உற்பத்தி மற்றும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள்) ஊழியர்களுக்கு அதிகபட்சம் 14 வருடங்கள் 

2.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த முதல் நிலை ஊழியர்களுக்கு (மேனேஜர் மற்றும் நிர்வாகம் தொடர்பாக பணிபுரிபவர்கள்) அதிகபட்சம் 22 வருடங்கள்

3.மலேசியா மற்றும் NAS நாடுகளைச் சார்ந்த அனைவருக்கும் எந்தவிதமான கால வரையறைகளுமின்றி அவர்கள் விரும்பும் வரை பணிபுரிய அனுமதி உண்டு. 

கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறை (Construction Sector)  ஊழியர்களுக்கு:


1.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த SEC & SEC(K) சான்றிதழ்கள் கொண்ட இரண்டாம் நிலை (கட்டுமானத் தொழிலாளர்கள்) ஊழியர்களுக்கு அதிகபட்சம் 14 வருடங்கள் 

2.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த முதல் நிலை (மேனேஜர் மற்றும் பொறியாளர்கள் போன்ற) ஊழியர்களுக்கு அதிகபட்சம் 26 வருடங்கள்

3.மலேசியா மற்றும் NAS நாடுகளைச் சார்ந்த அனைவருக்கும் எந்தவிதமான கால வரையறைகளுமின்றி அவர்கள் விரும்பும் வரை பணிபுரிய அனுமதி உண்டு. 

செயல்முறை சார்ந்த துறையில் (Process Sector) பணிபுரியும் ஊழியர்களுக்கு:

1.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த இரண்டாம் நிலை ( பராமரிப்பு மற்றும் கட்டுமானம்) ஊழியர்களுக்கு அதிகபட்சம் 14 வருடங்கள் 

2.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த முதல் நிலை ஊழியர்களுக்கு (மேனேஜர், பொறியாளர்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக பணிபுரிபவர்கள்) அதிகபட்சம் 26 வருடங்கள்

3.மலேசியா மற்றும் NAS நாடுகளைச் சார்ந்த அனைவருக்கும் எந்தவிதமான கால வரையறைகளுமின்றி அவர்கள் விரும்பும் வரை பணிபுரிய அனுமதி உண்டு. 

வங்கி மற்றும் பொருளாதாரம், ரியல் எஸ்டேட், காப்பீடு போன்ற சேவைத் துறை (Service Sector) பணியாளர்களுக்கு:

1.சீனா/ NTS நாடுகளைச் சார்ந்த இரண்டாம் நிலை (அலுவலக உதவியாளர்கள் போன்ற) ஊழியர்களுக்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் 

2.சீனா/ NTS நாடுகளைச் சார்ந்த முதல் நிலை மற்றும் உயர் நிலை ஊழியர்கள் (மேனேஜர், அலுவலக பணியாளர்கள், பொறியாளர்கள் போன்றோர்) அதிகபட்சம் 22 ஆண்டுகள் வரை 

3.மலேசியா மற்றும் NAS நாடுகளைச் சார்ந்த அனைவருக்கும் எந்தவிதமான கால வரையறைகளுமின்றி அவர்கள் விரும்பும் வரை பணிபுரிய அனுமதி உண்டு. 

துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுமானத் துறை (Marine Shipyard Sector) ஊழியர்களுக்கு: 

1.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த இரண்டாம் நிலை (கப்பல்  மற்றும் துறைமுக பராமரிப்பு சார்ந்த) ஊழியர்களுக்கு அதிகபட்சம் 14 வருடங்கள் 

2.சீனா/NTS நாடுகளைச் சார்ந்த முதல் நிலை ஊழியர்களுக்கு (மேனேஜர், பொறியாளர்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக பணிபுரிபவர்கள்) அதிகபட்சம் 26 வருடங்கள்

3.மலேசியா மற்றும் NAS நாடுகளைச் சார்ந்த அனைவருக்கும் எந்தவிதமான கால வரையறைகளுமின்றி அவர்கள் விரும்பும் வரை பணிபுரிய அனுமதி உண்டு. 

இது மாதிரி தனிப்பட்ட துறைகளுக்கு வேறுபட்ட விதிமுறைகள் மற்றும் கால அவகாசங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டு உள்ளன. சிங்கப்பூரில் வேலை செய்பவர்களும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்களுள் இதுவும் ஒன்றாகும். 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்துதமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts