சிங்கப்பூர் : சிங்கப்பூர் சுற்றுச் சூழலுக்கு மாசுபடுத்தாத வகையில் வீட்டு உபயோகத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து HDB குடியிருப்புவாசிகளும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
300 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான மின்சாரம் மற்றும் தண்ணீரை சேமிக்கும் 10 வகையான மின்சாதன பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 225 டாலர் மதிப்பிலான voucher பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 3 அறைகளை உடைய ஒரே HDB flat ல் குடியிருப்பவர்கள் மட்டும் தான் இதை பயன்படுத்த முடியும். LED லைட்கள், ஃபிரிட்ஜ்கள், ஷவர் ஃபிட்டிங் ஆகியவற்றை வாங்குவதற்கு மட்டும் தான் இந்த voucher களை பயன்படுத்த முடியும் என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பொருட்களை வாங்கும் பிரிவிற்கு ஏற்ற வகையில் voucher தொகையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் இந்த சலுகை விலை திட்டம் 2023ம் ஆண்டு டிசம்பர் 31 வரை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என இருந்தது. ஆனால் இந்த திட்டம் பிறகு 2024ம் ஆண்டு மார்ச் 20 ம் தேதி வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த சலுகை திட்டம் நீட்டிக்கப்பட்டது குறித்தும், இதன் மூலம் பயனடைந்தவர்கள் பற்றியும் சிங்கப்பூர் அரசு சார்பில் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் குறித்து விளக்கிய நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் துறை மூத்த துணை அமைச்சர் எமி கோர் கூறுகையில், “காலநிலை சலுகை voucher சலுகையை பயன்படுத்திக் கொள்ள 145,800 குடியிருப்புவாசிகள் பதிவு செய்திருந்தனர். ஆனால் வெறும் 62,800 பேர் மட்டுமே அதனை பயன்படுத்திக் கொண்டள்ளனர்.
voucher பெற தகுதியானவர்கள் :
சில குடியிருப்புவாசிகள் ஆர்வமாக இதனை பயன்படுத்திக் கொள்ள முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்போது பயன்படுத்தி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இந்த voucher சலுகையை அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் 3 அறைகள் கொண்ட ஒரே flat ல் வசிப்பவர்கள் மட்டும் தான் இதனை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என சொல்லப்பட்டது. 300,000 மட்டுமே 3 அறைகள் கொண்ட ஒரே flat ல் வசிக்கிறார்கள். இதனால் தற்போது அனைத்து HDB குடியிருப்புவாசிகள், 2027 வரை புதிய flats களுக்கான சாவிகளை பெற இருப்போர் அனைவரும் இந்த voucher ஐ பெற தகுதியானவர்கள் ஆகிறார்கள்.
voucher ஆல் கிடைக்கும் பலன்கள் :
இந்த voucher திட்டத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது 2027ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்கள் உள்ளிட்ட வகைகளில் விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 10 வகையான வீட்டு உபயோகப் பொருட்களை இந்த திட்டத்தை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்றும், அவைகள் 60 சதவீதம் மின்சாரத்தையும், 90 சதவீதம் தண்ணீரையும் மிச்சப்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15ம் தேதி முதல் இந்த புதிய சலுகைக்கான voucher ஐ பெற்றுக் கொள்ளலாம்.
10 வகையான பொருட்கள் :
- air conditioners
- refrigerators
- LED lights
- direct current fans
- washing machines
- basin taps and mixers
- sink/bib taps and mixers
- water closets
- heat pump water heaters
- shower fittings
voucher களை வழங்கும் 14 retailers :
- Courts,
- Best Denki,
- FairPrice,
- Giant,
- Cold Storage,
- Audiohouse,
- Bathroom Warehouse,
- Chuan Heng Hardware Trading,
- Gain City,
- Mega Discount Store,
- Sheng Siong,
- T.S. Yong Trading
- Woodlands Domestic Electrical
- Harvey Norman
- Harvey Norman
மேலும் பல நிறுவனங்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இந்த சலுகை விலை விற்பனை நீட்டிக்கப்பட்டுள்ளதால் 60 சதவீதம் வாடிக்கையாளர்கள் காலநிலை voucher பயன்படுத்தி ஃபிரிட்ஜ், ஏசி போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக Gain City நிறுவனத்தின் assistant retail sales director Mike Kok தெரிவித்துள்ளார்.