பிரான்ஸ் நாட்டில் Montelimar பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனை தனது பணியாளர்களை வரும் செப்டம்பர் மாத பாதிக்கு முன்பாக கட்டாயமாக தடுப்பூசி போடச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் அப்படி செலுத்த முடியாது என்பவர்களை வேலையில் இருந்து நீக்கக்கபோவதாகவும் அறிவித்ததை தொடர்ந்து அதனை எதிர்த்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டாத்தால் 200 மருத்துவர்கள் மற்றும் 1500 செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ் சட்டமன்றம் சுகாதார பணியாளர்கள்
செப்டம்பர் 15 தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தை கொண்டுவர இருக்கிறது. போட மறுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும்.
இந்த கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவரவர் உரிமை அதனை கட்டாயப்படுத்தி திணிக்கக்கூடாது என ஜீலை மாதத்தில் இதுந்தே பிரான்ஸில் சுகாதார பணியாளர்கள் போராட்ட களத்தில் குரல் எழுப்பி வருகிறார்கள்.