TamilSaaga

சிங்கப்பூரில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊதிய உயர்வை அறிவிக்கின்றது

2024 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த பெரும்பாலான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது. ஆம், MOM அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு சிங்கப்பூரில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் தங்களுடைய தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நிறுவனங்களின் கருத்துக்கணிப்பின்படி 32.6% நிறுவனங்கள் முதல் மூன்று மாதங்களில் ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 18% கூடுதலாகும். அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 47 சதவீதம் நிறுவனங்கள் முதல் மூன்று மாதங்களில் நிறைய ஊழியர்களை நிறுவனங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து MOM அமைப்பு கூறியதாவது, நாட்டில் இதுபோன்று ஊதிய உயர்வு மற்றும் நிறுவனங்களுக்கு புதிய ஊழியர்களை எடுப்பது போன்ற செயல்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் இந்த 2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பது MOM -ன் கருத்து. ஆனால் உலகளாவிய சந்தையில் ஏற்படும் மாற்றங்களினால் சில இடங்களில் ஆட்குறைப்புகளும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. எனினும் அது பெரிய அளவில் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது.

ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வது பொதுவான விஷயம். கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஆட்குறைப்பு மிகவும் அதிகம். கடந்த காலங்களை அதாவது கொரோனா காலகட்டத்தில் நடந்த ஆட்குறைப்பு எண்ணிக்கைகளை விட கடந்த ஆண்டு நடந்தது மிகவும் அதிகம். எண்ணிக்கைகளில் சொல்ல போனால் கடந்த ஆண்டு சுமார் 14 ஆயிரத்து 590 ஊழியர்கள் வேலையில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் 2021, 2022 காலகட்டங்களில் சுமார் 6000 -ருந்து 8000 வரை ஆட்குறைப்பு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஆட்குறைப்பு ஆயிரம் பேருக்கு ஆறு சதவீதமாக கருதப்படுகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய வேலையை நினைத்து கவலைக்குள்ளாய் இருப்பார். இதனை தெளிவுபடுத்தும் விதமாக MOM அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

40 வயதில் இருந்து 50 வயதுக்குள் வேலை செய்யும் ஊழியர்களின் வேலைகள் ரிஸ்கில் உள்ளது. அதாவது இந்த வயதுக்குட்பட்ட ஊழியர்கள் ஆட்குறைப்பில் அதிகமாக காணப்பட வாய்ப்பு இருக்கிறது. 40 வயதுக்கு மேல் பணி புரிபவர்கள் பொதுவாக மேனேஜர் எக்ஸிக்யூட்டிஸ் டெக்னீசியன் போன்ற பணியில் இருப்பவர்கள். இவர்களுடைய வருமானம் அதிகமாக இருக்கக்கூடும். அதனால் இந்த வயதுக்குட்பட்டவர்களை பணியில் இருந்து நீக்க பெரும்பாலான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது. இது போன்ற ஆட்குறைப்பு செயல்களில் இருந்து மீண்டு வர நீங்கள் உங்களுடைய திறன்களை மேம்படுத்தி அதற்குண்டான பயிற்சிகளை எடுக்க வேண்டும். இது போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெறுவதனால் உங்களுடைய மதிப்பு கூடும் எனவே நிறுவனங்கள் உங்களை பணியில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பற்றியும் அவர்கள் வேறு நிறுவனங்களில் பணி அமர்ந்தது பற்றியும் விரிவாக பார்க்கலாம். வேறு நிறுவனங்களில் பணி அமர்வதை பொதுவாக ரி என்ட்ரி என்று குறிப்பிடுவார்கள். இது போன்று கலந்து ஆண்டுகளில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொண்டு ரீயென்றை செய்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நீக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் ஊழியர்கள் ரி என்ட்ரி செய்துள்ளனர். இது கொரோனா காலகட்டத்தை விட குறைவே ஆகும். இதுபோன்று ரீ என்ட்ரி செய்பவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வழங்கப்படும். ஒரு வேலையில் இருந்து நீக்கப்பட்ட பின் ஆறு மாதங்கள் கால அவகாசம் உண்டு, அதற்குள் தாங்கள் வேறு வேலையை புதியதொரு நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.

2023 ஆம் ஆண்டு ரீயண்ட்ரி செய்பவர்களின் எண்ணிக்கை 65 சதவீதம் உயர்ந்துள்ளதாக MOM அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வாறு ரீ என்ட்ரி மூலம் சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் அவர்களுடைய வருமானம் உயர்ந்திருக்கிறது. ஒரு வேளையில் நீக்கப்பட்ட பின் இன்னொரு வேலை சேரும் போது அவர்களுடைய வருமானமும் அதிகரிக்கிறது. அவ்வாறு ரீ என்ட்ரி மூலம் வேலை பெறுபவர்கள் பத்தில் ஆறு பேருக்கு ஊதிய உயர்வு நிச்சயமாக இருக்கிறது. இதனால் தொழிலாளர்களும் நிறுவனங்கள் என இருவரும் பயனடைந்திருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கணக்கெடுப்பின்படி 80 ஆயிரம் புதிய வேலைகள் உருவாகி இருக்கின்றன. புதிய வேலைகள் உருவாகி இருப்பதால் வேலை இழந்து ரீ என்ட்ரி செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

இதுபோன்று ஆட்குறைப்பு நிகழ்வுகள் குறிப்பிட்ட சில துறைகளிலே நடக்கிறது. அதில் முக்கியமாக வர்த்தகம், தகவல் தொடர்புத்துறை, எலக்ட்ரானிக் துறை ஆகியவை ஆகும். கடந்த காலங்களில் எலக்ட்ரானிக் துறையில் மட்டும் 27 சதவீதம் தொழிலாளர்கள் வேலையில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இதே போல் தகவல் தொடர்பு துறையிலும் 24 சதவீதம் தொழிலாளர்கள் பணியில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக நிறுவனங்களின் புதிய அமைப்புகளும் வளர்ச்சிக்கான நீண்ட கால இலக்காக கருதப்படுகிறது என MOM அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் ரீ என்ட்ரி 70% ஆக இருக்க நிறைய வாய்ப்புள்ளது. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு 82 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. குறிப்பாக கட்டுமான துறையில் அதிக வேலை வாய்ப்புகள் அதிகரித்தது. இதுபோன்று இந்த ஆண்டும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக வாய்ப்புகள் இருக்கிறது. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் சமயத்தில் அன் எம்ப்ளாய்மெண்ட் ரேட் அதே நிலையிலும் அல்லது அதற்கு கீழே செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் குறிப்பிட்ட துறைகளில் வேலை வழங்க நிறைய திட்டங்களை வழி வகுத்திருக்கிறது MOM அமைப்பு. இதன் மூலம் நாடு முன்னேற்ற வடையும் அதனோடு மக்களும் பல்வேறு பயன்களை பெறுவர்.

Related posts