TamilSaaga

திருச்சி முதல் சிங்கப்பூர் வரை : வாரம்தோறும் இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளும் தங்களுடைய எல்லைகளை குறைவான நாடுகளுக்கே திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிற நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு மக்களை உலகின் பல நாடுகளும் பல திட்டங்களை அறிமுகம் செய்து மீண்டும் தாயகம் அழைத்து வருகின்றது. அந்த வகையில் அண்டை நாடான இந்தியா வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் மக்களை நாடுகள் கடந்து பயணிக்க வழிவகை செய்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூருக்கும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. பிற விமான சேவைகள் இல்லாத நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூர் செல்கின்றது.

மேலும் வந்தே பாரத் விமானச் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் செவ்வாய் மற்றும் வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக இயக்கப்படுகிறது.

Related posts