பிரான்சில் சமீபத்தில் நடந்த ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற பதினாறு சதவீதம் பேர் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் எண்ணம் இல்லை என்று அறிவித்துள்ளனர். ஜூலை 13 முதல் 15 வரை லெஸ் எக்கோஸ் செய்தித்தாள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 1,00 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
உயர் சமூக-தொழில்முறையை சேர்ந்தவர்களை விட தொழிலாள வர்க்க மக்கள் தடுப்பூசி மறுக்க இரு மடங்கு அதிகமாக ஆர்வம் காட்டுவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தீவிர வலதுசாரி அரசியல் கட்சியான ராஸெம்பிள்மென்ட் நேஷனின் ஆதரவாளர்களும் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக மற்ற கட்சிகளின் ஆதரவாளர்களை விட இரு மடங்கு அதிகமாக ஆர்வம்காட்டுகின்றனர். அவர்களது ஆதரவாளர்களில் 29% பேர் தடுப்பூசி போட விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
பிரான்சில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பெரியவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோவிட் தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பிரான்ஸ் 80 முதல் 85% தடுப்பூசி அளிக்கப்படும் என்று தான் நம்புவதாக பிரான்சின் சுகாதார மந்திரி ஆலிவர் வாரன் தெரிவித்தார்.