சிங்கப்பூரில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஊழியர் 7.5 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் வெளிநாட்டு ஊழியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊழியர்களின் நலனை பெரிதாக கருதி மனிதவள அமைச்சகம் எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் கட்டுமான பணிகளில் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
மூன்று நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் பெய்த மழையின் காரணமாக கட்டுமான பணியில் ஈடுபட்ட மூன்று ஊழியர்களை மின்னல் தாக்கியதில் ஊழியர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்நிலையில் ஜுராங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமான தளத்தில் ஈடுபட்டிருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 27 வயது ஊழியர் அதிகாலை இரண்டரை மணி அளவில் தவறி விழுந்ததாக தெரியவந்துள்ளது.
உடனடியாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் விரைந்து சென்ற பொழுதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. இன்னும் எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை இந்த கட்டுமானத்துறை காவு வாங்க போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.