சிங்கப்பூருக்கு செல்வதென்றால் சாதாரண காரியம் அல்ல அதுவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் அது ஒரு தவமாகும். படித்த படிப்பிற்கு இந்தியாவில் வேலை கிடைக்காமல் பெற்றோர்கள் சேமித்து வைத்த மொத்த பணத்தையும் ஏஜெண்டுகளுக்கு கொட்டி அதுவும் பத்தாமல் கடன் வாங்கி சிங்கப்பூருக்கு மகனை அனுப்பும் பெற்றோரின் கஷ்டத்தை எழுத்தால் எழுத முடியாது. ஆனால் அந்த கஷ்டத்தை உணர்ந்து சேமித்து வைத்து வீட்டிற்கு பணத்தை அனுப்பும் இளைஞர்கள் மிக குறைவு தான் என்றே சொல்லலாம்.
சிங்கப்பூரில் வீட்டு வாடகை, சாப்பாடு போன்ற செலவுகளை கழித்தால் கையில் சிறிதளவு பணம் மட்டுமே மிஞ்சும். அவற்றை சிக்கனமாக செலவு செய்தால் மட்டுமே கடனை சீக்கிரம் அடைத்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக முடியும். சிங்கப்பூருக்கு எதற்கு போகின்றோம் என்பதே மறந்து அங்கு காதல் வலையில் விழுந்து, வேலை இழந்து தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்துள்ளார் ஒரு இளைஞர்.
சிங்கப்பூரில் சென்ற ஆரம்ப கட்டத்தில் வீட்டிற்கு பணத்தை அனுப்பியவர் அங்கு வேலை செய்யும் இந்தோனேசியா பெண்ணின் தோழமை கிடைக்கவே அது சில நாளில் காதலாக மாறியது. ஆரம்ப கட்டத்தில் இளைஞரை உண்மையாக காதலிப்பது போலவே நடித்த பெண் அவருடன் சேர்ந்து உல்லாசமாக ஊர் சுற்றியுள்ளார். சிறிது நாள் செல்லவே அந்தப் பெண் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். அவருடன் சேர்த்து எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டி தனக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் போலீசில் நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்ற புகார் அளிப்பேன் எனவும் கூறியுள்ளார். பிரச்சனை தலையை மீறி போகவே இந்தியாவில் உள்ள தனது பெற்றோருக்கு விஷயத்தை சொல்லி அவர்களிடம் அந்தப் பெண்ணிற்கு கொடுத்து எப்படியோ சமாளித்து முடித்தனர். பின்பு இந்த பிரச்சினையை வேண்டாம் என வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார் அந்த இளைஞர்.