TamilSaaga

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவிற்கான பணிகள் கோலாகலமாக தொடக்கம்… முன்பதிவு செய்ய நவம்பர் 4-ம் தேதி கடைசி நாள்!

சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் ரோடில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஆனது இந்துக்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் பலரும் வாரத்திற்கு ஒருமுறை வந்து செல்லும் பிரசித்தி பெற்ற பழமையான அம்மன் கோயில் இதுவாகும். வருடத்திற்கு ஒருமுறை இந்த கோவிலில் நடக்கும் தீமிதி திருவிழாவானது சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாகும்.கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த திருவிழாவானது சிம்பிளாக நடைபெற்ற நிலையில் இந்த வருடம் மீண்டும் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி தீமிதி திருவிழாவிற்கான கொடியேற்றம் ஆனது வெகு விமர்சையாக தொடங்கியது. இந்நிலையில் இந்த வருடம் தீமிதி திருவிழாவில் பங்கேற்க விரும்புவர்கள் கட்டாயமாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.மேலும் நேரில் வந்து பதிவு செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் கண்டிப்பாக தெரிவித்து இருந்தது. மேலும் தீமிதி திருவிழாவிற்கான முன் பதிவு நவம்பர் 4-ம் தேதி முடிவடையும் என தெரிவித்திருந்த நிலையில் இன்னும் ஒரு நாள் மீதி இருப்பதால் பக்தர்கள் யாரேனும் தீமிதி திருவிழாவில் பங்கேற்க நினைத்தால் நாளைக்குள் பதிவு செய்து தங்களது வேண்டுதலின் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி திருவிழாவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலின் அருகில் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இதுவரை பல்வேறு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால் இந்த வருடம் தீமிதி திருவிழாவானது களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts