TamilSaaga

சிங்கப்பூரில் வேறு வேலைக்கு மாறும் பொழுது அப்ரூவல் பாசினை கவனிக்காமல் ஏஜென்ட்க்கு பணம் கட்டிய நண்பர்… என்ன நடந்தது தெரியுமா?

ஒர்க் பெர்மிட்டில் இருந்து S- பாஸ்க்கு மாறும் சிங்கப்பூர் நண்பர்களே ஏஜென்டிடம் பணம் கட்டுவதற்கு முன்னால் உங்களது அப்ரூவல் பாசை கவனமாக செக் செய்து கொண்டு அதன் பின்னர் பணத்தை செலுத்துங்கள். ஏனென்றால் நம்மிடம் ஏஜென்ட் கூறும் வேலை ஒன்றாக இருக்கின்றது ஆனால் பாசில் குறிப்பிடப்படும் வேலை ஒன்றாக இருக்கின்றது.

இப்படிதான் சிங்கப்பூரில் நண்பருக்கு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. சிங்கப்பூரில் உள்ள பிரபல கம்பெனியில் டிரைவராக ஒர்க் பர்மிட்டில் ஐந்து வருடங்களாக பணி புரியும் நண்பர் S-Pass மாற வேண்டும் என ஏஜென்டிடம் அட்வான்ஸ் பணம் கட்டினார். ஏஜென்ட் டிரைவர் வேலையே வாங்கித் தருவதாக சொல்லி பாஸ்க்கு அப்ளை செய்துவிட்டார்.பாசில் டிரைவர் வேலை என்று குறிப்பிடப்பட்டிருந்தால் class-3 லைசன்ஸ் எடுத்து அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்லலாம் என ஆசையில் பாஸ்க்கு அப்ளை செய்தார். கிளாஸ் 3 லைசென்ஸ் கையில் இருந்தால் சிங்கப்பூரை பொறுத்தவரை கிளாஸ் 4 லைசன்ஸ்க்கு அப்ளை செய்யலாம்.

Class-4 லைசன்ஸ் எடுக்க வேண்டுமென்றால் சிங்கப்பூர் விதிமுறைப்படி பாசில் டிரைவர் தகுதியானது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். டிரைவிங் தொகுதி அல்லாமல் வேறு எந்த வகையான வேலை இருந்தாலும் லைசன்ஸ் கிடைக்க வாய்ப்பு இல்லை.எனவே எப்படியாவது கிளாஸ்-4 லைசென்ஸ் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் நண்பரும் மொத்த பணத்தையும் ஏஜென்டிடம் செலுத்தி விட்டார்.அதன் பின்னர் பாசை பார்த்த பொழுது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஏனென்றால் இவர் பணிபுரிய போகும் வேலையானது டிரைவராக இருந்தாலும் டிரைவர் என குறிப்பிடாமல் வேறு வேலை குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவசரப்பட்டு பணத்தைக் கட்டி விட்டோமே என்ற கவலையில் வேறு வேலைக்கு போக முடியாமல் அவர் தற்பொழுது கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றார். பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் சிங்கப்பூரை பொறுத்தவரை உங்களது பாசில் என்ன வேலை குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அதுதான் உங்களது தகுதியை நிர்ணயிக்கும்.நண்பர்களே நீங்கள் வேறு ஒரு வேலைக்கு அப்ளை செய்வதற்கு முன்னால் அப்ரூவல் பாசை நன்கு கவனித்து விட்டு பின்னால் ஏஜென்டிடம் பணம் கட்டுங்கள்.

Related posts