சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்ட ஸ்கூட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து விமானம் திரும்ப சாங்கி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து வியாழக்கிழமை மாலை சுமார் நான்கு மணி அளவில் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெடிகுண்டு இருக்கின்றது என்று தகவல் கிடைத்ததை ஒட்டி சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் பயணிகள் யாருக்கும் வெடிகுண்டு செய்தியை சொல்லாமல் தொழில்நுட்ப கோளாறு உள்ளது எனவும் எனவே உடனடியாக தரையிறக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விமானத்தின் பாதுகாப்பிற்காக சிங்கப்பூரை விமானப்படையை சேர்ந்த விமானங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. விமானப்படைகளின் பாதுகாப்புடன் சிங்கப்பூருக்கு வந்த விமானம் மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் அளவில் தரை இறக்கப்பட்டது.
விஷயத்தின் ஆபத்து புரியாததால் விமானத்தில் இருந்த பயணிகள் போர் விமானத்தை கண்டதும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர். உடனடியாக தரையில் இறக்கப்பட்ட விமானத்தை முழுவதும் சோதித்துப் பார்த்ததில் வெறும் புரளி என்று தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்ந்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர் .