தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும், ஆகவே கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசியை தவறாமல் செலுத்திக்கொள்ளுமாறும் நாட்டில் உள்ள மூத்த குடிமக்களிடம் பிரதமர் லீ ஹ்சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். வயதானவர்களுக்கு, குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு COVID-19 ஒரு ஆபத்தான நோய் என்று திரு. லீ மூத்த குடிமக்களுக்கு நினைவுபடுத்தினார்.
“நீங்கள் அதிகம் வெளியே செல்லாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து இருந்து அது உங்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது, ஆனால் கவலைப்பட வேண்டாம் பெருந்தொற்று தடுப்பூசி உங்களை காக்கும்” என்றார் பிரதமர்.
தடுப்பூசிகள் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் பிரதமர் தெரிவித்தார், “பெரும்பாலும் தீவிரமானவை அல்ல” என்று கூறினார். “உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள், இது உங்கள் உடல் பெருந்தொடருக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது” என்றார்.
நாட்டில் இன்று புதிதாக 130 பேருக்கு பெருந்தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 64,054ஆக உயர்த்தியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 447 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.