இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்பது சில இளைஞர்களின் கனவு என்றாலும் அதை போராடி வென்று சிங்கப்பூருக்கு சென்று நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அடுத்தப்படியாக அனைவரும் மனதிலும் ஓடுவது எப்படியாவது அடுத்த passக்கு முன்னேறி விட வேண்டும் என்பதுதான். பொதுவாக ஒர்க் பெர்மிட்டில் சிங்கப்பூருக்கு சென்று ஆயிரம் வெள்ளி சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் எப்படியாவது S-passக்கு மாறிவிட்டால் கை நிறைய சம்பளம் வாங்கலாம் என்ற எண்ணத்துடன் பல்வேறு வகையில் முயற்சி செய்வது உண்டு.
சிங்கப்பூரை பொறுத்தவரை ஒர்க் பெர்மிட்டில் இருந்து S-passக்கு மாற வேண்டும் என்றால் கண்டிப்பாக ஏஜென்டின் தயவு இல்லாமல் அது முடியாது. ஏனென்றால் குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு பெர்மீட்டில் இருந்து S-passற்கு வருகின்றவர்களுக்கு என தனி கோட்டா இருக்கும். அது குறித்த விவரங்கள் ஏஜெண்டுகளுக்கு மட்டுமே தெரியும் என்பதால் நிறுவனத்தின் முதலாளிகளும் ஏஜென்டிடமே பொறுப்பை ஒப்படைத்து விடுவார். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் வேலையை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
மரத்தில் இருக்கும் பலா காயை விட கையில் இருக்கும் கலா காயின் மேல் என்ற நிலைமைக்கு நீங்கள் ஆளாகி விடக்கூடாது. நீங்கள் உங்களது கம்பெனிகளில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் வேலை கிடைத்து பாஸ் approval ஆனவுடன் உங்களது பாஸ்போர்ட் ஆனது உங்களது கைக்கு கிடைக்க வேண்டும். கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் கொடுக்காமல் கம்பெனி பிரச்சனை செய்தால் உங்களால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் கையில் இருக்கும் வேலை பறிபோனது மட்டுமல்லாமல், வேறு ஏஜென்ட் இருக்கும் குறிப்பிட்ட அளவு பணத்தை கொடுக்க வேண்டியது இருக்கும்.
இன்னும் சில இடங்களில் பாஸ்போர்ட்டை நீங்கள் கொடுக்க வேண்டுமானால் 2000 மில்லி முதல் 3000 வெள்ளி வரை பணம் கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் நிறுவனங்களும் உண்டு. எனவே வேறு ஒரு passக்கு மாறுவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் உங்களது கம்பெனியில் இருந்து நீங்கள் முறையாக வெளியேற முடியுமா என்பதுதான். அதற்கு அடுத்த கட்டத்தில் நீங்கள் வேலைக்கு செல்ல போகும் கம்பெனியில் உங்களது அனுபவத்திற்கு ஏற்ற வேலைக்கு செல்கின்றீர்களா என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஏஜெண்டுகளை பொருத்தவரை ஏதாவது பொய் சொல்லி உங்களுக்கு அந்த வேலை தெரியும் என்று புது முதலாளிடம் சொல்லிவிட்டு உங்களை வேலைக்கு சேர்த்து விட்டு அவர்கள் போய்விடுவார்கள்.
அதற்குப்பின் உங்களுக்கு அந்த வேலை தெரியாது என்று பட்சத்தில் மூன்று மாதம் வரை கம்பெனி ஆனது பொறுத்திருக்கும். அதற்கு மேல் உங்களது திறன் சரியில்லை என்றால் உங்களை வேலையை விட்டு தூக்க மூன்று மாதத்திற்குள் முதலாளிக்கு அனுமதி உண்டு. நீங்கள் மீண்டும் பணம் கட்டி புதிதாக வேறு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். சிங்கப்பூரை பொறுத்தவரை ஒரு முறை ஏஜென்டிற்கு பணம் கட்ட வேண்டுமானால் உங்களது ஒரு வருட சேமிப்பை கொடுக்க வேண்டியது இருக்கும். அப்படி இருக்கும் பொழுது மீண்டும் பணம் கட்ட உங்களிடம் சக்தி இருக்காது என்பதை அறிந்து கொண்டு கவனமாக வேறு வேலைக்கு அப்ளை செய்யுங்கள். முறையான ஏஜெண்டை தேர்ந்தெடுத்து முறையான வேலைக்கு சென்று விட்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு அடுத்த கட்டத்தில் முன்னேறி விடலாம் என்பது நம்பிக்கை ஊட்டும் விஷயம் தான். எனவே அதனை அறிந்து கவனமாக செயல்பட்டால் வெற்றி உறுதி.