சிங்கப்பூரில் வசிக்கும் 46 வயது உடைய பெண்மணி தனது ஒன்பது வயது மகளுடன் பாசிர் ரிஸ் எனப்படும் பகுதிக்கு செல்வதற்கு சனிக்கிழமை டாடா வாடகை கார் புக் செய்தார். அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் டிரைவர் அந்த பெண்மணியை இன ரீதியாக திட்டியதாக தெரியவந்துள்ளது. பெண்ணின் உறவினர் பாசிர் ரிஸ் பகுதியில் புதிதாக குடியேறியதால் அவரை காண்பதற்காக பெண்ணும் அவருடைய மகளும் வாடகை காரில் சென்றுள்ளனர்.
சாலையில் செல்லும் வழியில் MRT புதுப்பித்தல் வேலை நடப்பதன் காரணமாக சாலையானது தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எனவே திரும்பவும் வேற சாலை வழியாக சுற்றுச் செல்ல வேண்டும் என்று அறிந்த ஓட்டுநர் டென்ஷன் ஆகிவிட்டார். அதனால் பெண்மணி தவறான வழியை காட்டியதாக தனது பாஷையில் திட்ட ஆரம்பித்து விட்டார். நீங்கள் ஒரு இந்தியர் எனவும் நீங்கள் ஒரு முட்டாள் எனவும் அந்த ஓட்டுநர் பெண்ணை திட்டியதாக தெரியவந்துள்ளது.
ஓட்டுநர் திட்ட ஆரம்பித்தவுடன் பெண் தனது கைபேசியை எடுத்து உரையாடலை ரெக்கார்ட் செய்ய தொடங்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட, பெண்ணின் வீடியோ டிக் டாக்கிலும் அப்லோட் செய்யப்பட்டு கார் ஓட்டுனர் திட்டும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. தொடர்ந்து வாக்குவாதம் தொடர ஆரம்பிக்கவே ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியபடி நீங்கள் ஒரு இந்தியர் நான் ஒரு சீன நாட்டைச் சேர்ந்தவர் நீங்கள் மிகவும் மோசமானவர் என்று கூறத் தொடங்கியுள்ளார். அதற்கு பதில் அளித்த அந்த பெண்மணி நான் இந்தியர் அல்ல என்றும் சிங்கபூர் யுரேஷியர் என்றும் கூறியுள்ளா.ர் இவ்வாறு நடந்த உரையாடலை பெண் டாடா நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டாடா நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.