சிங்கப்பூரில் காருடன் லாரி மோதியதில் 70 வயதை ஒட்டிய முதியவர் மரணமடைந்துள்ளார். முதியவர் காரை ஓட்டிக்கொண்டு வந்த பொழுது, அந்த காரானது பேருந்து மற்றும் லாரியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தானது அப்பர் தாம்சன் ரோட்டில் ஜூலை 7, காலை 10 மணி அளவில் நடைபெற்றதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் காரை ஓட்டிக் கொண்டு வந்த முதியவர் காரின் இருக்கையில் மாட்டிக் கொண்டதாகவும், காரின் பாகங்களை வெட்டிய பின்னரே முதியவரை, மிகவும் சிரமப்பட்டு மீட்டதாகவும் சிங்கப்பூரில் குடிமை தற்காப்பு படை தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய மற்றொருவர் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக உதவிகளை வழங்கினர். மேலும் மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிகின்றது.
26 வயதை ஒட்டிய லாரி ஓட்டுநர் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியது விபத்திற்கு காரணம் என்று காவல்துறை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகிறது.
சிங்கப்பூரில் பணி புரியும் பெரும்பாலான டிரைவர்களில் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஏராளம். எனவே, சாலையில் வாகனங்களை ஓட்டும்பொழுது கவனத்துடன் செயல்படுங்கள். நாம் சம்பாதிப்பதற்காக இங்கு வந்துள்ளோம், நம்மை நம்பி ஒரு குடும்பம் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தில் வாகனத்தினை கவனமாக கையாளுங்கள்.