TamilSaaga

சிங்கப்பூருக்கு வெறும் 10 நாளில் வேலைக்கு வரும் வாய்ப்பு தரும் TEP Pass!

சிங்கப்பூரில் வேலைக்கு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது Skilled டெஸ்ட். அதேபோல், S Pass, E pass, student visa, pcm permit என்று பல வகைகள் இருந்தாலும், பெரும்பாலானோர் TEP பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை.

ஆனால், இன்றைய சூழலில் TEP-ல் சிங்கப்பூருக்கு நீங்கள் எளிதாக வர முடியும். Skilled Test கோட்டா இப்போது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பல பேர் தமிழகத்தில் Test அடித்துவிட்டு, இன்னமும் சிங்கப்பூர் வராமல் இழுத்தடிப்பதால், சிங்கை மனித வளத்துறை அமைச்சகம் கோட்டா எண்ணிக்கையை குறைத்துள்ளது.

அதேபோல், இப்போதெல்லாம் S-Pass கிடைப்பதும் குதிரைக் கொம்பாக உள்ளது. எவ்வளவு முயன்றாலும் S-Pass கிடைப்பது போராட்டமாக உள்ளது. இந்த சூழலில், TEP-ல் சிங்கப்பூர் வருவதே நல்ல ஐடியா என்று கூறலாம்.

TEP என்பது Training Employment Pass. இந்த Pass-ஐ பெறுவதற்கு நீங்கள் ஏஜெண்ட்டை தான் அணுக வேண்டும். எனினும், நாம் முன்பே சொன்னது போல், விளம்பரங்களை பார்த்து ஏஜெண்டுகளை அழைக்காமல், உங்களுக்கு நன்கு தெரிந்த அல்லது உங்கள் நண்பர்களையோ, உறவினர்களையோ சிங்கப்பூருக்கு அனுப்பிய ஏஜெண்ட்டாக இருந்தால் மட்டும் அணுகுங்கள். அப்போதும் கூட, பணத்தை உடனடியாக கொடுத்துவிட வேண்டாம்.

மேலும் படிக்க – குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியலையா? சிங்கப்பூரில் வேலை கிடைப்பது கடினமா இருக்கா? ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுக்காமல் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்கான “10 வழிகள்”!

TEP மூலம் சிங்கப்பூர் வருபவர்கள் 3 மாதம் மட்டுமே இங்கே இருக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த பாஸில் வருவதற்கு நீங்கள் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு டிகிரி முடித்து அதற்கான ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். பிறகு இந்த பாஸுக்கு அப்ளை செய்யும் பட்சத்தில், 10 நாட்களில் நீங்கள் சிங்கப்பூருக்கு வந்து விடலாம். இதற்கு கட்டணமாக அதிகபட்சமாக $2500 சிங்கப்பூர் டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்த பாஸ் மூலம் வருபவர்களுக்கு, அதிகபட்சமாக 2000 சிங்கப்பூர் டாலர்கள் ஊதியமாக கொடுக்கப்படுகிறது. ஓவர் டைமும் உண்டு. இதற்கு, 3 மாதம் மட்டுமே என்பதால், தற்காலிக அடையாள அட்டை உங்களுக்கு கொடுக்கப்படும்.

TEP பாஸ்-ல் வருபவர்கள் இதனை புதுப்பிக்க முடியாது. நீங்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் வேலைப்பார்க்க வேண்டுமெனில், வேறு புதிய பாஸுக்கு தான் அப்ளை செய்ய வேண்டும். சிங்கப்பூரில் இருந்து கொண்ட புதிய பாஸுக்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் மீண்டும் இந்தியா சென்று, புதிய பாஸுக்கு அப்ளை செய்து வரலாம். இன்றைய நிலவரப்படி, இந்த TEP மற்றும் E-pass-ல் தான் அதிகமானோர் தற்போது சிங்கப்பூரில் வேலைக்கு எடுக்கப்பட்டு வருகின்றனர். நாம் ஏற்கனவே சொன்னது போல், Skilled Test Quota பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. எனினும், இது இன்றைய சூழல் மட்டுமே. வரும் மாதங்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் ஆச்ச்சர்யப்படுவதற்கில்லை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts