பொதுவாக ஒரு சில பஸ்கள் தான் குறிக்கப்பட்ட நேரத்தினை விட 5 அல்லது 10 நிமிடம் முன்னரே சென்று பயணிகளை கடுப்பாக்கும். ஆனால் சிங்கப்பூர் சென்ற Scoot விமானம் நான்கு மணி நேரம் முன்னரே பறந்த கதை தான் தற்போதைய சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிகாக மாறி இருக்கிறது.
சமீபகாலமாக ஏர்லைன்ஸில் நடக்கவே நடக்காது என நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நடந்து வருகிறது. அது வைரல் பட்டியலாக தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் கோ பர்ஸ்ட் விமானம் பெங்களூரில் கிளம்பியது. இதில் என்ன ஆச்சரியம் கேட்டீங்கனா? 55 பயணிகளை விட்டுவிட்டு அவர்களின் லக்கேஜை மட்டும் ஏற்றிக்கொண்டு சென்றது தான் காமெடியின் உச்சமே. இதே போன்று சம்பவம் தான் scoot ஏர்லைன்ஸில் நடந்து இருக்கிறது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 7.55 மணிக்கு கிளம்புவதாக குறிக்கப்பட்டு இருந்தது ஒரு Scoot விமானம். இதில் 280 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். எப்போதும் போல 2 முதல் 3 மணி நேரம் முன்னால் போனால் போதும் என நினைத்து சிலர் 4 மணிக்கும் 5 மணிக்கும் விமான நிலையம் சென்றனர். அங்கு தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தாங்கள் செல்ல வேண்டிய 7.55 மணி ப்ளைட் 3 மணிக்கே கிளம்பியதாக விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தினை மிஸ் செய்த 35 பயணிகள் இதனால் கடுப்பாகினர். அங்கையே போராட்டம் செய்ய தொடங்கினர். இதனால் அந்த இடம் பரபரப்பானது. உடனே விமான நிலைய அதிகாரிகள் ஸ்கூட்டிடம் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது ஸ்கூட் அதிகாரிகள் விமானத்தின் நேர மாற்றத்தினை இமெயில் மூலம் அறிவித்து விட்டதாக தெரிவித்தனர்.
இருந்தும், இந்த பிரச்னைக்கு கண்டிப்பாக பஞ்சாப் விமான நிலையமும், ஸ்கூட் ஏர்லைன்ஸ் அதிகாரிகளும் விளக்கம் அளிக்க வேண்டும் விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அறிவித்துள்ளது. மேலும், பயணிகள் அனைவரும் ஏஜென்ட்டிடம் விமான டிக்கெட் புக் செய்து இருக்கின்றனர். அவர்கள் இவர்களிடம் தெரிவிக்காமல் விட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்னும் என்னெல்லாம் பார்க்கணுமோ!