SINGAPORE: சிங்கப்பூரில் நல்ல வேலையை ஏமாறாமல் பெறுவதற்கு இருக்கும் பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுவது தான் skilled test. இதில் பாஸ் ஆகி சான்றிதழ் வைத்திருந்தால் உங்களால் எப்போது வேண்டும் என்றாலும் சிங்கப்பூர் செல்ல முடியும். ஒவ்வொரு முறை போவதற்கும் ஏஜென்ட் கட்டணம் குறையும். உங்களுக்கு அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளமும் கூடும். இப்படி இருக்கும் skilled testல் பல துறைகள் இருக்கிறது. இதில் கம்மியான கட்டணம் வாங்கும் படிப்பு என்வென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
S Pass மற்றும் EPassன் செலவுகளை கணக்கிடும் போது skilled test அடித்து சிங்கப்பூர் சென்றால் குறைந்தது 1 முதல் 1.5 லட்ச ரூபாய் கட்டணம் மிச்சமாகும். இதற்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அங்கீகாரமிக்க skilled செண்டர்களில் அட்மிஷன் போடுங்கள். முதல் பணமாக சில ஆயிரங்கள் மட்டுமே கேட்பார்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு கோர்ஸ்களுக்கும் வெவ்வேறு விதமான கட்டணங்கள் இருக்கும். skilled test படிப்பிலேயே காஸ்ட்லியாக பார்க்கப்படுவது M & E துறையை தான்.
இதில், M & E Tradeல் Thermal Insulation, Electrical Wiring Installation, Plumbing & pipe Fitting, Ducting Installation – AC ஆகிய படிப்புகள் இருக்கிறது. இந்த படிப்பினை படிப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் என்பதால் இதற்கு இன்ஸ்ட்யூட்கள் கட்டணமும் அதிகமாக வாங்குவார்கள். இதைப்போன்றே, Pipe-Fitting, Precast Kerb & Drain Laying, Structural Steel Fitting, Welding ஆகிய படிப்புகள் civil துறையில் இருக்கிறது. இதுவும் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் துறை என்பதால் மற்றதை விட அதிக கட்டணம் கேட்கப்படும்.
ஆனால், Future Proposed, Architectural Trade , Structural Trade ஆகியவற்றுக்கு இன்ஸ்டிட்யூட் கட்டணம் M&E மற்றும் civil துறைகளை ஒப்பிடும் போது கம்மியாக தான் இருக்கும். ஏறக்குறைய 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் கம்மியாக தான் வாங்குவார்கள். இதனால் இன்ஸ்டியூட்களுக்கு செல்லும்போது இதுகுறித்து தீர விசாரித்து கொள்ளுங்கள்.
கட்டணத்தில் வித்தியாசம் இருந்தாலும் இந்த துறைகளில் பயிற்சி பெற்று சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் ஊழியர்கள் அனைவருக்குமே சம்பளம் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.