சிங்கப்பூரில் லட்சங்களை கொடுத்து ஏஜெண்ட் மூலம் வேலை தேடி S-passல் வந்திருக்கும் ஊழியர்கள் ஒரு பக்கம் என்றால், சமீபகாலமாக வேலைக்கான வெப்சைட்டில் அப்ளே செய்தும் வருவது அதிகரித்திருக்கிறது. எந்த வெப்சைட், சம்பளம் எப்படி இருக்கும் என்ற முக்கியமான தகவல்கள் உங்களுக்காக…
சிங்கப்பூரில் வேலை தேட ஆப்ஸ் மற்றும் வெப்சைட்கள் நிறைய இருக்கிறது. ஆனால், அதில் Nala employment, job street, jobsDB, job bank, stjobs, My career’s future, Linkedin jobs ஆகியவை தான் மிகவும் பிரபலமானவை. இவற்றில் job street தளத்தில் இருந்து அதிக ஊழியர்கள் வேலைக்காக சிங்கப்பூர் வந்திருக்கிறார்கள்.
job street தளத்தில் உங்களின் சுய விவரங்களை பதிவிடுங்கள். பின்னர் உங்களின் துறையில் இருக்கும் வேலைகள் குறித்து தேடுங்கள். ஒருநாளைக்கு குறைந்தது 10 கம்பெனிக்காகவது அப்ளே செய்யுங்கள்.
மேலும், உங்க ரிசியூம் ஒரு பக்கத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். துறை சார்ந்த வேலை வேண்டாம் என நினைப்பவர்கள் பொதுவான வேலைக்கு கூட அப்ளே செய்யலாம்.
கம்பெனி தரப்பில் நீங்கள் ஓகேவாக இருந்தால் 10 நாட்களுக்குள் உங்களை தொடர்பு கொள்வார்கள். s passல் சிங்கப்பூர் செல்ல கண்டிப்பாக டிப்ளமோ அல்லது டிகிரியை முடித்திருக்க வேண்டியது கட்டாயம்.
இதில் கன்சல்டன்சிக்கு அப்ளேஎ செய்வதை விட நேரடியாக கம்பெனிக்கு அப்ளே செய்யுங்கள். இப்போ நீங்க வேலைக்கு தேர்வு செய்யப்பட்டா உடனே வேலைக்காக ஆபர் லெட்டர் வாங்கிக் கொள்ளுங்கள். சிங்கப்பூரில் இருந்து IPA வரும். அது வந்தவுடன் டிக்கெட் போட்டுக்கொண்டு நேரடியாக வேலைக்கு வந்துவிடலாம். சம்பளமாக சிலர் 1.5 லட்சம் வரை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இங்கு வந்த பிறகு MOMக்கு நேரடியாக சென்று உங்கள் தகவல்களை பதிவு செய்து விடுங்கள். இதற்கு கட்டணமாக $100 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உங்களுக்கு spass கிடைத்து விடும்.
நீங்கள் தேர்வு செய்த கம்பெனி முறையானதாக இருக்கும் பட்சத்தில் ஆரம்ப சம்பளமே லட்சத்தில் இருக்கும். தப்பான கம்பெனியாக இருந்தால் அவர்கள் கொடுக்கும் சம்பளமும் சரியாக வராது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இதன் மூலம் ஏஜென்ட்டிடம் பல லட்சத்தினை கொடுக்காமல் தப்பிக்கலாம். மொத்த செலவுகளில் கூட பெரிய தொகை குறையும் எனக் கூறப்படுகிறது.