TamilSaaga

இன்டர்நெட்டை ஆக்ரமித்த சிரிப்பு தேவதை… இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் அந்த அழகு சிரிப்பை சிரிப்பீங்க…

ஒவ்வொரு நாளை நன்றாக ஓட்டிவிட வேண்டும் என்ற ஆசையில் தான் நம்மில் பலரும் ஓடியாடி உழைத்துக்கொண்டிருக்கின்றோம். அதிலும் சிறுவயதில் வறுமை கொடுமைனு தான் சொல்லி கேட்டிருப்போம். அதிகாலை 4 மணிக்கு டோல்கேட்டில் முந்திரி விற்கும் இளம் வயது பெண்ணின் அழகான சிரிப்பு தான் தற்போதைய இணையத்தின் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு ஒவ்வொரு நாளும் சில வைரல் வீடியோக்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து வருகின்றன. குழந்தைகளின் வீடியோ துவங்கி முதியவர்கள் செய்யும் சேட்டை வரை வீடியோவாக வெளிவந்து செம ரீச்சையும் பெற்று வருகிறது.

இதில் சில எளிய மனிதர்களின் வீடியோக்கள் தான் ஒட்டுமொத்த அனைவராலும் ரசிக்கப்படும். அதைப்போல தான் கடந்த சில மணிநேரமாக கல்லூரி மாணவி ஒருவரின் வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. Tamil TechGuruji என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகியது.

அதில், தமிழ்நாட்டில் இருக்கும் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் சாதாரணமாக இருக்கும் இளம்பெண் ஒருவர் முந்திரி விற்றுக்கொண்டு இருக்கிறார். அவரை கண்ட TechGuruji யூட்யூபர் உங்க சிரிப்பு தான் என்னை இங்கே கூட்டி வந்துச்சு. என்ன படிச்சிட்டு இருக்கீங்க எனக் கேட்கிறார். அந்த பெண்ணும் தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பதாக கூறுகிறார். தொடர்ந்து, அவர் வெட்கப்பட இதில் வெட்கப்பட ஒண்ணுமில்லை. படிச்சிக்கொண்டே வேலை செய்வது பெரிய விஷயம். நல்லா படிங்க. இது வாழ்க்கையில் இல்லை என சொல்லி செல்கிறார். இதனுடன் வீடியோ முடிவடைகிறது.

வீடியோவைக்காண இங்கே கிளிக்கவும்: தன்னோட வெட்கத்தை அழகா வெளிக்காட்டுனாங்க 

அவரிடம் சாதாரணமாக பேச்சுக்கள் நடந்தாலும் அந்த பெண்ணின் சிரிப்பிலிருந்து வெளிவரவே முடியவில்லை. காலை 4மணிக்கு அந்த பெண் முகத்தில் பெரிதாக சோர்வில்லாமல் தெரியும் அந்த சிரிப்பை அத்தனை அழகாக இருப்பதாக அந்த போஸ்ட்டில் பலரும் கமெண்ட்களை தட்டி வருகின்றனர். 15 மணி நேரத்திற்குள் இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts