TamilSaaga

நள்ளிரவு நேரம்.. எதிர்பாராத சம்பவம்.. சிங்கப்பூரில் இருக்கையில் சிக்கியபடியே உயிரிழந்து கிடந்த ஊழியர் – ஞாயிறு அன்று என்ன நடந்தது?

சிங்கப்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக். 9) காலை ஹூகாங் டிப்போவுக்கு வெளியே மரத்தில் SBS transit மோதியதில் 54 வயதான பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து ஞாயிறு அதிகாலை 2.40 மணியளவில் 4 Defu Avenue 1-ல் ஏற்பட்டது. இதையடுத்து, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் சிங்கப்பூர்க் காவல் படை (SPF) ஆகியவற்றுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தனர்.

இதுகுறித்து SCDF வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிய நிலையில், SCDF-ஆல் மீட்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் to தமிழகம்… சூப்பரான ஆஃபரை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – மிகக் குறைந்த விலையில் டிக்கெட் கட்டணம்

சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, காலியாக இருந்த பேருந்தை அந்த ஊழியர் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, டிப்போவிற்கு வெளியே இருந்த மரத்தில் மோதியது என்று SBS Transit-ன் தொடர்புத் துறை துணைத் தலைவர் கிரேஸ் வு கூறியுள்ளார்.

“அவரது மறைவால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததன் காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் பேருந்தை வேகமாக இயக்கினாரா அல்லது வேறு ஏதும் விபத்துக்கு காரணமா என்பது குறித்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts