TamilSaaga

சிங்கப்பூரில் சிக்கிய 13 கிலோ போதைப்பொருள்.. தீ அணைக்கும் கருவியில் கஞ்சா கடத்திய “Brilliant” டீம் – கொத்தாக சிக்கிய 5 பேர் – தூக்கு உறுதி!

SINGAPORE: மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள், 5 நபர்களை கைது செய்து கிட்டத்தட்ட 13 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

அதில், கஞ்சா, ஐஸ், ஹெராயின், கெட்டமைன், எக்ஸ்டஸி மாத்திரைகள், எரிமின்-5 மாத்திரைகள் மற்றும் லைசர்ஜிக் ஆசிட் டைதிலாமைடு (எல்எஸ்டி) Stamps ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு $790,000 என மதிப்பிடப்பட்டுள்ளது,

இந்த நடவடிக்கையில், CNB அதிகாரிகள் 42 வயதான சிங்கப்பூர் நபரை திங்கள்கிழமை பிற்பகல் ரிவர்வேல் சாலைக்கு அருகில் அவரது வாகனத்தை இடைமறித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 6,069 கிராம் கஞ்சா, 524 கிராம் ஐஸ் மற்றும் 124 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் மூன்று தீயை அணைக்கும் கருவிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த தீயை அணைக்கும் கருவி ஒன்றில் சுமார் 4,517 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரின் வீடும் அதே பகுதியில் இருந்ததால், போலீசார் அங்கும் அவரை நேரடியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இதில் சுமார் 2,224 கிராம் கஞ்சா, 20 கிராம் கஞ்சா விதைகள், 301 கிராம் ஐஸ், 246 கிராம் கெட்டமைன், 1 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 648 எரிமின்-5 மாத்திரைகள் மற்றும் 94 எல்.எஸ்.டி. Stamps கைப்பற்றப்பட்டன.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் தொழிலாளரின் உயிரை பறித்த விபத்து.. ஆய்வுக்கு சென்று தலையில் அடித்துக் கொண்ட அதிகாரிகள் – நிறுவனத்துக்கு ‘Stop Work’ ஆர்டர் கொடுத்து செம்மட்டி அடி!

திங்கட்கிழமை பிற்பகலில் CNB அதிகாரிகள் நடத்திய மற்றொரு தேடுதல் வேட்டையில், 33 வயது சிங்கப்பூரர் மற்றும் 42 வயது சிங்கப்பூரர் ஒருவரை Upper செராங்கூன் வியூவிற்கு அருகில் கைது செய்தனர். இதில், 33 வயதுடைய நபரிடமிருந்து சுமார் 12 கிராம் ஹெரோயினும், 42 வயதான நபரிடமிருந்து சுமார் 31 கிராம் ஐஸ் போதைப்பொருளும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 42 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து மொத்தம் 2,002 கிராம் ஹெராயின், 1,312 கிராம் ஐஸ், 66 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுமட்டுமின்றி, 40 வயதுடைய வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 15 கிராம் தூய ஹெராயின் (டயமார்பைன்), 250 கிராம் மெத்தாம்பேட்டமைன் அல்லது 500 கிராம் கஞ்சாவை கடத்தியதாகக் கண்டறியப்பட்டால், கட்டாயம் அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts