அமெரிக்காவில் 31 வயது பெண் ஒருவர், தனது ஆறு வயது மகளை, உடலுறவுக்காக ஒருவரிடம் விற்றுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கிழக்கு நகரமான ஸ்போகேனைச் சேர்ந்த கைலி ரூபி புளோரஸ், ட்ரெவர் டேனியல் ஹார்டர் என்பவரை டேட்டிங் இணையதளமான ப்ளென்டி ஆஃப் ஃபிஷ் மூலம் சந்தித்தார் என்று வாஷிங்டனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்காவின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தங்குவதற்கும், சிறிய அளவிலான பணத்திற்கும் ஆசைப்பட்டு, தனது மகளை தெரிந்தே ஹார்டாருக்கான பாலியல் தேவைக்காக விற்க ஒப்புக் கொண்டார்.
Flores எனும் அந்த பெண்ணுக்கு, ஒரு ஜோடி Nike ஷூஸ் வாங்கித் தருவதாகவும் அந்த நபர் உறுதி அளித்திருக்கிறார்.
பிப்ரவரி 2, 2021 மற்றும் ஜூலை 26, 2021 இடையே இந்த பாலியல் செயல்கள் நடந்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஜூலை 2021 இல் சட்ட அமலாக்க அதிகாரிகளால் மீட்கப்பட்ட வீடியோவில், ஹார்டர் தனது குடியிருப்பில் வைத்து சிறுமியை வன்கொடுமை செய்ததை காண முடிகிறது.
அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
ஹார்டர் மற்றும் ஃப்ளோர்ஸ் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், புளோரஸ் தனது ஆறு வயது மகளை தெரிந்தே பாலியல் கொடுமையில் ஈடுபடுத்தியதற்காக கடந்த செப்டம்பர் 21 அன்று 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேசமயம், ஒரு சிறு பிள்ளையை நாசம் செய்த ஹார்டர் தனது தண்டனைக்காக காத்திருக்கிறார்.
வாஷிங்டனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம், சிறுமி பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறியுள்ளது.