TamilSaaga

90 வயது… சிங்கப்பூரில் 47 ஆண்டுகளாக அதே கடை.. அதே உழைப்பு! நள்ளிரவு 1 மணிக்கே வேலையைத் தொடங்கும் “ஓய்வே இல்லாத உழைப்பாளி”

SINGAPORE: உழைக்க மனம் இருந்தால் போதும், வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் இந்த முதியவர்.

ஆம்! சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Liu Zhenhe. 1932ம் ஆண்டு பிறந்த லியூ, மிக மிக ஏழ்மையான சூழலில் வளர்ந்தார். இரண்டாம் உலகப் போர் காரணமாக, இவருக்கு சரியான கல்வியும் கிடைக்கவில்லை.

இதனால், சிறு வயதிலேயே தனது தாய் செய்து வந்த tau kwa தயாரிக்கும் வேலையை இவரும் கற்றுக் கொண்டார். tau kwa என்பது ஆங்கிலத்தில் Soya Bean Curd என்று அழைக்கப்படும். அவருடைய தாயுடன் இணைந்து tau kwa உற்பத்தி செய்து வீடு வீடாக சென்று டோர் டெலிவரி செய்வதே இவரது வேலையாக இருந்தது,

ஆனால், ஒருக்கட்டத்தில் இவர்கள் வேலை செய்து வந்த tau kwa ஃபேக்டரி கடும் நிதி நெருக்கடி காரணமாக இழுத்து மூடப்பட, இருவரும் வேலையின்றி தவித்தனர். அப்போது Liu-ன் தாய், ‘ஏன் நாமே சொந்தமாக ஒரு கடை ஒன்றை தொடங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். அதன் விளைவாக உருவானது Liu-ன் tau kwa ஷாப்.

தொழில் தொடங்கிய உடனே நல்ல லாபம் கிடைத்தது. சைக்கிளில் சென்று டோர் டெலிவரி செய்த நிலையில் இருந்து, மினி லாரி ஒன்று வாங்கி அதில் டோர் டெலிவரி செய்யும் அளவுக்கு வளர்ந்தார்கள். பிறகு லியூ-வின் தாய் மரணமடைந்த பிறகு, 43 வயதான லியூ Ang Mo Kio 628 Market and Food Centre-ல் தனது கடையை நிறுவினார்.

சிங்கப்பூரில் கடை தொடங்கி இப்போது வரை 47 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அதே இடத்தில் அதே கடையை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். வயதோ இப்போது 90. அவரது இளைய மகன் மேற்பார்வையில் கடை இயங்கி வருகிறது. ஆனால், வயதாகிவிட்டது என்பதற்காக வீட்டில் ஓய்வெடுக்காமல், தினம் நள்ளிரவு 1 மணிக்கெல்லாம், கடையை திறந்து, வேலையை தொடங்கிவிடுகிறார்.

லியு ஆங் மோ கியோ 628 சந்தை மற்றும் உணவு மையத்தில் முதல் தலைமுறை வியாபாரி என்று SMDN தெரிவித்துள்ளது, அங்கு அவர் பழமையான ஸ்டால் உரிமையாளர்களில் ஒருவர்.

சிங்கப்பூரின் கியோ 628 மார்க்கெட் மற்றும் உணவு மையத்தில் கடை தொடங்கிய முதல் தலைமுறையைச் சேர்ந்தவர் என்ற பெருமை லியூ-வுக்கு உண்டு. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடை நடத்தும் மிக பழமையான கடை உரிமையாளரும் லியூ தான்.

ஓய்வு என்பது தனது வாழ்க்கையிலேயே கிடையாது என்பதை கொள்கையாக கொண்டு இந்த வயதிலும் உழைக்கும் லியூவுக்கு சிங்கப்பூரின் தமிழ் மக்கள் சார்பாக ஒரு ராயல் சல்யூட்!

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts