TamilSaaga

இரு மகள்களுக்கு திருமணம்.. கடனை கட்ட வீட்டை விற்க தயரான தந்தை – கடைசி நிமிடத்தில் கோடீஸ்வரரான ஆச்சர்யம்

தனது மகளுக்கு ஒரு தந்தை செய்ய வேண்டிய முக்கியமான கடமை என்பது அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதும் தான். அந்த வகையில் தனது இரண்டு மகள்களின் திருமணத்தை நடத்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு தந்தை சுமார் 45 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் தான் painter தொழில் செய்து வரும் முகமது, 50 வயதான முகமது கடந்த திங்கள்கிழமை தனது 2,000 சதுர அடி கொண்ட வீட்டை விற்பனை செய்வதற்கான டோக்கன் முன்பணத்தை எடுக்கவிருந்த நிலையில் தான் அவருக்கு ஜாக்பாட் பரிசு ஒன்று அடித்துள்ளது.

மகள்கள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க இருந்த ஒரே சொத்தை விற்றுவிட்டு குடும்பத்துடன் வாடகை வீட்டிற்கு மாற முகமது முடிவு செய்திருந்தார். முகமது பாவா மற்றும் அவரது மனைவி அன்னிக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களின் இரு மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

விடா முயற்சி.. குடும்பத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் உழைப்பு.. சிங்கப்பூரில் ஒவ்வொரு தமிழனுக்கும்… இன்று (ஜுலை.27) பெருமைத்தேடித் தந்த ஊழியர்… அரங்கம் அதிர விருது வென்ற தமிழன்!

அதே போல தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்பவும் அவர் கடன் வாங்கிய நிலையில் தான் அவர் வீட்டை விற்கும் சூழல் வந்துள்ளது. இந்த நேரத்தில் தான் முகமது ஓசங்கடியில் உள்ள அம்மா லாட்டரி ஏஜென்சியில் லாட்டரி சீட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது.

கடந்த திங்களன்று சரியாக அவர் வீட்டை விற்க கிளம்பும் சில மணி நேரத்திற்கு முன்பு அவர் அந்த லாட்டரியில் 1 கோடி ரூபாய் வென்றது தெரியவந்தது. பிடித்தம் போக முகமதுவிற்கு 63 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இறுதியில் வீட்டை விற்கும் அந்த நிலையில் இருந்து மாறி தற்போது முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷ கடலில் மிதந்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts