TamilSaaga

“தங்க மனசு”.. சிங்கப்பூரில் உயிரிழந்த ராஜேந்திரன் – “தமிழ் சாகா” மூலம் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியல்.. கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது!

தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்தின் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நிச்சயம் இதனை பார்க்க முடிகிறது. ஆம்! சிங்கப்பூரில் உயிரிழந்த ஊழியர் பெரியசாமி ராஜேந்திரன் குடும்பத்துக்கு உதவிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி, சிங்கப்பூரின் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre-ல் நடந்த விபத்தில், கிரேனில் சிக்கி தமிழக ஊழியர் பெரியசாமி ராஜேந்திரன் உயிரிழந்தார்.

வெறும் 33 வயதே ஆன இந்த ஊழியருக்கு, 7 மாத கைக்குழந்தை, 13 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சத்யாவின் வயது 30. சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரனின் நெருங்கிய உறவினர் மருதமுத்து என்பவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜேந்திரனின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களின் நிலையை நமது தமிழ் சாகா செய்தி குழு கேட்டறிந்தது. ஊழியரின் மனைவி சத்யாவும், உதவி கேட்டு நமக்கு பிரத்யேகமாக வீடியோ ஒன்றும் அனுப்பி இருந்தார்.

3 பிள்ளைகளுடன் தவிக்கும் அவரது குடும்பத்துக்கு உதவும் நோக்கில், இறந்த ஊழியரின் மனைவி சத்யாவின் வங்கிக் கணக்கின் விவரம் நமது தமிழ் சாகா மூலம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பணம் அனுப்புபவர்கள் தங்களின் பெயர் மற்றும் இதர விவரங்களை தமிழ் சாகாவின் வாட்ஸ் அப் எண்ணான 8269 418 418-க்கு அனுப்ப சொல்லி கேட்டிருந்தோம்.

இந்நிலையில், நேற்று (ஜுலை.19) வரை அவரது வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.6,000 வரை சேர்ந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து பலரும் தங்களால் முடிந்த தொகையை அனுப்பியுள்ளனர். ஆனால், மிகச் சிலர் மட்டுமே நமக்கு அவரது பெயரையும், அனுப்பிய தொகை விவரங்களையும் தெரியப்படுத்தி உள்ளனர். மற்றவர்கள் யாருமே, தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உதவி செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் பெரியசாமி ராஜேந்திரனின் குடும்பம் சார்பாக நாம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், தங்கள் விவரங்களை தெரியப்படுத்தியவர்களின் பட்டியலை மட்டுமே இங்கே வெளியிடுகிறோம்.

சிங்கப்பூரில் இருந்து உதவித்தொகை அனுப்பியவர்கள்

திரு. கண்ணன் வெங்கடேசன் – ரூ.565

திரு. க்ரிஷ் பழனி – ரூ.1,000

ராதாகிருஷ்ணன் – ரூ.500

மொத்தம் ரூ.6,000 உதவித் தொகை கிடைத்திருந்தாலும், மற்றவர்களின் விவரங்கள் கிடைக்கவில்லை. இந்த செய்தியை பார்க்கும் பட்சத்தில் உதவி செய்தவர்கள், தமிழ் சாகாவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தங்கள் பெயர் மற்றும் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மீண்டும் ஒரு முறை ஊழியர் பெரியசாமி ராஜேந்திரன் குடும்பத்தின் சார்பாக அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கொண்டு உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் வங்கி எண் மூலம் உதவி புரியலாம்.

Indian Bank
Veppur Branch
Name: Sathya
A/C NO: 7247233853
IFSC : IDIB000V121

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts