TamilSaaga

“சிங்கப்பூரர்களை வாட்டும் பணவீக்கம்..” மீண்டும் கைகொடுக்கும் சிங்கை அரசு – 1.5 மில்லியன் பேருக்கு உடனடி நிதியுதவி!

சிங்கப்பூரில் வசிக்கும் சுமார் 1.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் அடுத்த மாதம் $700 வரை அரசிடம் இருந்து ரொக்கமாகப் பெறுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் அதிகரித்திருக்கும் பணவீக்கத்தை பொதுமக்கள் சமாளிக்க 1.5 பில்லியன் டாலர் உதவி திட்டத்தின் ஒரு பகுதி தான் இது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நேற்று செவ்வாயன்று (ஜூலை 12) நிதி அமைச்சகம் (MOF) வெளியிட்ட தகவலில் தெரிவித்தது. இது கடந்த மாதம் சிங்கையின் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரி வவுச்சர் (GSTV) திட்டம் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 5,75,000 சிங்கப்பூரர்கள் இந்த GSTV திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களின் மத்திய வருங்கால வைப்பு நிதி மெடிசேவ் கணக்குகளில் $450 வரை பெறுவார்கள்.

வான் மற்றும் கடல் வழி.. சிங்கப்பூருக்குள் நுழையும் அனைவரும் “SGACஐ சமர்ப்பிக்க வேண்டும்”.. நினைவூட்டும் ICA – எப்படி சமர்ப்பிக்கலாம்?

அதேபோல டிசம்பர் 31, 1969 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் மற்றும் ஏற்கனவே முன்னோடி அல்லது மெர்டேக்கா ஜெனரேஷன் பலன்களைப் பெறாதவர்களும் அடுத்த மாத இறுதிக்குள் அவர்களின் மெடிசேவ் கணக்குகளில் $100 வரவு வைக்கப்படும்.

“என்ன இப்படி பொசுக்குன்னு கொறச்சுட்டீங்க..” சிங்கப்பூரில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்த Grab – வெளியான அட்டவணை

குறைந்த வருமான கொண்ட குடும்ப பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள், அவர்களின் ஜிஎஸ்டி செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட உதவுவதற்காக அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக இந்த கொடுப்பனவுகள் இருப்பதாக MOF தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts